கோட்டா பிராமணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டா பிராமணர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கருநாடகம், இந்தியா
மொழி(கள்)
வேறுபட்ட கன்னடத்தை தாய்மொழியாகப் பேசுகிறார்கள். [1]
சமயங்கள்
இந்து சமயம்

கோட்டா பிராமணர்கள் (Kota Brahmins) என்பவர்கள் முக்கியமாக இந்திய மாநிலமான கருநாடகாவைச் சேர்ந்த ஒரு இந்து பிராமணத் துணைச் சாதியாகும். இவர்கள் தங்கள் பெயரை தங்கள் சொந்த கிராமமான கோட்டாவிலிருந்து பெறுகிறார்கள். இவர்கள் மற்ற பிராந்திய பேச்சுவழக்குகளிலிருந்து வேறுபட்ட கன்னடதைப் பேசுகிறார்கள். இவர்கள் முக்கியமாக உடுப்பி மாவட்டத்தின் கோட்டா கிராமங்களில் குவிந்துள்ளனர். இவர்கள் ஸ்மார்த்தப் பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். நரசிம்மர், சாலிகிராமம் அவர்களுக்கு முக்கியமானதாகும்.

இவர்கள் கர்நாடகவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், மங்களூர், பந்த்வால் மற்றும் தெற்கு கன்னட மாவட்டத்தின் புத்தூர் வட்டம் போன்ற பகுதிகளில் பரவியிருக்கின்றனர். முதலில் வட இந்தியாவிலிருந்து கோட்டா (உடுப்பி தாலுகா) மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு வந்ததாகக் கருதப்படுகிறார்கள்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_பிராமணர்கள்&oldid=3366576" இருந்து மீள்விக்கப்பட்டது