கோசுரி பாலங்கள்

ஆள்கூறுகள்: 9°59′24″N 76°15′40″E / 9.990°N 76.261°E / 9.990; 76.261
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோசுரி பாலங்கள் (Goshree bridges) என்பது கொச்சி நகரத்தின் பிரதான நிலப்பகுதியை உப்பங்கழிகளின் வடக்கே அமைந்துள்ள தீவுகளுடன் இணைக்கும் பாலங்களின் அமைப்பாகும்.[1] இது முளவுக்காடு மற்றும் வல்லர்பாடம் தீவுகளுக்கு முக்கியமான சாலை இணைப்பை வழங்குகிறது. மேலும் மேற்கு தீவான வைப்பீன் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது. பாலங்கள் மரைன் டிரைவின் வடக்கு முனையிலிருந்து உயர் நீதிமன்றத்திற்கும் பச்சலத்திற்கும் இடையில் தொடங்குகின்றன.

கோசுரி பாலம் எண் 1 எர்ணாகுளத்தை போல்கட்டி தீவுடன் இணைக்கிறது

இந்த பாலங்கள் கேரள அரசால் அமைக்கப்பட்ட கோசுரி தீவு மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்பட்டுள்ளன. பாலத்தை ஒட்டியுள்ள மீட்கப்பட்ட நிலத்தின் விற்பனை வருமானத்தால் இந்த கட்டுமானத்திற்கு நிதி வழங்கப்பட்டது.

29 திசம்பர் 2000 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. எர்ணாகுளத்திற்கும் போல்கட்டிக்கும் இடையிலான முதல் பிரிவு 29 திசம்பர் 2003 அன்று திறக்கப்பட்டது. போல்கட்டிக்கும் வல்லர்பாடத்திற்கும் இடையிலான பிரிவு 10 பிப்ரவரி 2004 அன்று திறக்கப்பட்டது. கடைசி பிரிவு 17 மார்ச் 2004 அன்று நிறைவடைந்தது மற்றும் முழு பாலமும் சூன் 5 அன்று முறையாக திறக்கப்பட்டது.[2][3]

போல்கட்டி மற்றும் வல்லர்பாடம் தீவுகளுக்கு சாலை இணைப்பதற்கான ஒரே வழி இந்த பாலமாகும். இது முன்னர் படகு சேவைகளை நம்பியிருந்த வைப்பீன் தீவு மற்றும் வடமேற்கில் உள்ள புறநகர்ப் பகுதிகளுக்கு நகரத்திற்கு நேரடி சாலை இணைப்பையும் வழங்குகிறது. செரியன் வர்கி கட்டுமான நிறுவனம் அதன் கட்டுமானத்தில் ஈடுபட்டது.

முளவுக்காட்டிலிருந்து புதிய கொள்கலன் தேசிய நெடுஞ்சாலை மலபார் , கொச்சி, வடக்கு பறவூர் ஆகியவற்றை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Opening of Goshree" (PDF). Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 2011-01-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "A chronology of Goshree project". Chennai, India: the Hindu. 2004-03-17 இம் மூலத்தில் இருந்து 2004-07-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040710080753/http://www.hindu.com/2004/03/17/stories/2004031713390300.htm. பார்த்த நாள்: 2011-01-04. 
  3. "Goshree bridges' inauguration today". Chennai, India: The Hindu. 2004-06-05 இம் மூலத்தில் இருந்து 2004-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040823090309/http://www.hindu.com/2004/06/05/stories/2004060512410300.htm. பார்த்த நாள்: 2011-01-04. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசுரி_பாலங்கள்&oldid=3730520" இலிருந்து மீள்விக்கப்பட்டது