கோசலா தேவி
கோசலா தேவி | |
---|---|
மகத நாட்டின் பேரரசி | |
துணைவர் | பிம்பிசாரன் |
குழந்தைகளின் பெயர்கள் | அஜாதசத்ரு |
அரசமரபு | ஹரியங்கா (திருமணத்தின் மூலம்) இக்ஷ்வாகு (பிறப்பின் மூலம்) |
தந்தை | மகா கோசல மன்னன் |
மதம் | பௌத்தம் |
கோசலா தேவி, மகதப் பேரரசின் அரசியாக பிம்பிசார பேரரசரின் (கிமு 558-491) முதல் மனைவியாக இருந்துள்ளார். கோசல அரசாங்கத்தின் காசியின் இளவரசியாகப் பிறந்த இவர் பிரசேனஜித் மன்னரின் சகோதரி ஆவார். இவருடைய இயற்பெயர் பத்ரா-ஸ்ரீ என்பதாகும். [1]
வாழ்க்கை
[தொகு]கோசல மன்னன் மஹா-கோசலனுக்கு மகளாகப் பிறந்தவர் கோசல தேவி. அமகா கோசலனுக்கு பின்பாக மன்னனாக பொறுப்பேற்ற பிரசேனஜித்தின் சகோதரியுமாவார். பிம்பிசார மன்னனை மணந்து. அதற்க்கு வரதட்சணையாக காசி நகரத்தையே கொண்டுவந்து. [2] அவனுடைய முதன்மை ராணியானாள். அதன்படி மகதப் பேரரசின் அரசியாகவும் ஆனார்.
பிம்பிசாரருக்கும் கோசாலைக்கும் பிறந்தவர் தான்அஜாதசத்ரு என பௌத்த புராணக்கதைகள் சொல்லுகின்றன. ஆனால் [3] ஜெயின் பாரம்பரியமோ அஜாதசத்ருவை பிம்பிசாரரின் இரண்டாவது மனைவியான செல்லனாவின் மகனாக சொல்லிவருகிறது . [4] பசேனடியின் (பிரசென்ஜித்) மகளும், கோசலையின் மருமகளுமான, இளவரசி வஜிரா, அஜாதசத்ருவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். [5]
தனது கணவர் பிம்பிசரர், இத்தம்பதியரின் சொந்த மகனான அஜாதசத்ருவின் கைகளாலேயே இறப்புண்டதால் மனமுடைந்து, பேரரசி கோசலா தேவி அவரது கணவர் மீது கொண்ட அன்பினாலும் துக்கத்தினாலும் சதியை ஏற்று இறந்ததாகக் கூறப்படுகிறது. அஜாதசத்ரு பின்னர் காசி மீது படையெடுத்தார்.
மேற்கோள்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Cbeta 線上閱讀".
- ↑ Upinder Singh 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-03-14.
- ↑ Rapson, Edward James (1955). The Cambridge History of India. CUP Archive. p. 183.
- ↑ Hemchandra, Raychaudhuri (2006). Political History Of Ancient India. Genesis Publishing. p. 170.Hemchandra, Raychaudhuri (2006). Political History Of Ancient India. Genesis Publishing. p. 170.