கொழுப்பு குறைந்த முட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொழுப்பு குறைந்த முட்டை அல்லது பத்திய முட்டை என்பது கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பின் அளவு குறைவாகவும், சால்மொனெல்லா போன்ற பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் முறையிலும் உருவாக்கப்பட்ட முட்டை கொழுப்பு குறைந்த முட்டை ஆகும்.[1]

முட்டையின் சத்து அளவு[தொகு]

70 கலோரிகள் ஆற்றல், 4.5 கிராம் கொழுப்பு (அதில் 1.5 செறிவடைந்த கொழுப்பு), 6 கிராம் புரதம், 1 கிராம் கரிமப்பொருள், 6.5 மி.கிராம் சோடியம் கொண்டவையே கொழுப்பு குறைந்த முட்டை ஆகும்.

உருவாக்கம்[தொகு]

கோழிகளின் உணவை சரி செய்வதன் அமிலம் உருவாக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளாக கனடாவில் உள்ள அல்பேர்ட்டா பல்கலைகழகத்தில் கொழுப்பு குறைந்த முட்டை கோழிகளின் உணவு கண்டறியப்பட்டது. இயற்கையாக விளைந்த தானியங்கள், உயிர்ச்சத்து ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் சரியான அளவில் கலந்து உருவாக்கப்படுகிறது.[2] சத்தான உணவை உண்டு வளரும் கோழிகள் உருவாக்கும் முட்டைகள் பாக்டீரியா கிருமிகளின் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றிக்கொள்வதுடன் கொலஸ்ட்ராலின் அளவுன் குறைவாக உள்ளது.

உருவாகும் இடங்கள்[தொகு]

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் சில இடங்களில்கொழுப்பு குறைந்த முட்டை உருவாக்கப்படுகிறது[3]

முட்டையின் பயன்கள்[தொகு]

இபிஏ (EPA - Eicosapentaenoic acid) எனப்படும் எக்கோஸ்பென்டாயிக் அமிலம் மற்றும் டிஎச்ஏ (DHA - Docosahexaenoic acid) எனப்படும் டொக்கோச ஹெக்சயானிக் அமிலம் கொழுப்பு குறைந்த முட்டையில் இருப்பதால், டிரைகிளிசரடைடுகள், எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்தத்தில் கட்டி உருவாவதைக் குறைக்கிறது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Eggs With Less Cholesterol: Industry's Salvation or Sham?
  2. Healthy Eggs and Low-Cholesterol Egg Substitutes
  3. பொ.ஐங்கரநேசன் (2001). தெரியுமா-அறிவியல்விளக்கங்களின் தொகுப்பு. சென்னை: அரும்பு பதிப்பகம். பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88038-73-3.