கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில்
இராமேசுவரம் மகாதேவர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கொல்லம் மாவட்டம் |
அமைவு: | கொல்லம் |
ஆள்கூறுகள்: | 8°53′28″N 76°34′10″E / 8.891233°N 76.5694428°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள கட்டடக்கலை |
கல்வெட்டுகள்: | 2 |
கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில் (Kollam Rameswaram Mahadeva Temple) என்பது கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில், கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.[1][2] இந்தக் கோயிலின் முதன்மை தெய்வம் மேற்கு நோக்கி எதிர்கொள்ளும் ராமேஸ்வரர் ஆவார். இந்த கொல்லம் ராமேஸ்வரம் மகாதேவர் கோவிலானது கேரளத்தின் 108 சிவன் கோவில்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலானது பரசுராமரால் நிறுவப்பட்டது என்று கருதப்படுகிறது.[3][4] இது 108 சிவாலய சேத்திரங்களில் உள்ள இரண்டு இராமேஸ்வரம் கோவில்களில் ஒன்றாகும். அமரவில இராமேஸ்வரம் மகாதேவர் கோயில் என்பது இன்னொரு இராமேஸ்வரம் கோயிலாகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமரவில என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் மேற்கிலும், வடக்கு பக்கங்களில் என இரண்டு சிறிய கோபுரங்கள் உள்ளன. மேற்கில் பலிபீடத்தின் அருகில் செப்பினாலான கொடி மரம் உள்ளது. பிரதான கருவறையானது செவ்வக வடிவில் உள்ளது மேலும் சன்னதி கல் மற்றும் மரங்களில் அழகிய வேலைப்பாடுகளால் அழகூட்டபட்டுள்ளது. கேரள-திராவிட கலைப் பாணியில் வலியம்பலம் மற்றும் பாலகல்பூரா போன்றவை உள்ளன.[3][5]
கல்வெட்டுகள்
[தொகு]இராமேஸ்வரம் கோயிலின் முற்றத்தில் அமைக்கப்பட்ட ஒரு தூணில் 12 ஆம் நூற்றாண்டின் சேர மன்னரான இராம குலசேகரனின் அரசாணை உள்ளது.[6]
துணை தெய்வங்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- 108 சிவன் கோயில்கள்
- கேரள கோவில்கள்
- அமரவில ராமேஸ்வரம் ஸ்ரீ மகாதேவா் கோயில்
- ஆனந்தவல்லேஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயில்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Kollam District Siva Temples - Kerala - Talukwise listing of Mahadevar Ambalam". www.shaivam.org.
- ↑ "Rameshwara Temple, Kollam - TripAdvisor". TripAdvisor.
- ↑ 3.0 3.1 "Rameswaram Mahadeva Temple Kollam". www.vaikhari.org.
- ↑ "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018. Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகஸ்ட் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". templesinindiainfo.com.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 127.