கொண்டகர்லா அவா

ஆள்கூறுகள்: 17°36′03″N 82°59′53″E / 17.600852°N 82.998148°E / 17.600852; 82.998148
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டகர்லா அவா
கொண்டகர்லா அவா பறவைகள் சரணாலயம்
Boats in Kondakarla ava 2.jpg
கொண்டகர்லா அவா ஏரி
Map showing the location of கொண்டகர்லா அவா
Map showing the location of கொண்டகர்லா அவா
கொண்டகர்லா அவா ஆந்திராவில் அமைவிடம்
அமைவிடம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்விசாகப்பட்டிணம்
ஆள்கூறுகள்17°36′03″N 82°59′53″E / 17.600852°N 82.998148°E / 17.600852; 82.998148
நிறுவப்பட்டது ()
நிருவாக அமைப்புஆந்திரப் பிரதேசம் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

கொண்டகர்லா அவா (Kondakarla Ava) என்பது தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகும். இது ஒரு தனித்துவமான மற்றும் அழிந்துவரும் வன வகையை உள்ளடக்கியது. இது கிழக்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[1]

நிலவியல்[தொகு]

கொண்டகர்லா அவா ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அச்சுதபுரம் மண்டலம் கொண்டகர்லா கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொண்டகர்லா ஊராட்சியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சரணாலயம் தனித்துவமான மற்றும் அழிந்து வரும் காடு வகை மற்றும் ஈரமான பசுமையான காடுகளை உள்ளடக்கியது. இது சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] இச்சரணாலயம் சுமார் 405 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது.

விலங்குகளும் தாவரங்களும்[தொகு]

ஈரப் பசுமையான காடுகளைக் கொண்ட இச்சரணாலயத்தில் குளுவை, ஊசிவால் வாத்து மற்றும் நத்தை குத்தி நாரை காணப்படுகின்றன. தாவரங்களில் தைபா அன்குசேட்டா, நிம்பாய்டு, அசோலா பிலிகுலோய்டு, பிஸ்டியா இசுட்ரியோட்டு முதலியன காணப்படுகின்றன.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gopal, B. Madhu (1 November 2017). "Visakhapatnam needs tourism police station". The Hindu. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/city-needs-tourism-police-station/article19959704.ece. 
  2. "Geography". aptourism.gov.in. 6 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Flora of the lake". timesofindia.indiatimes.com. 26 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டகர்லா_அவா&oldid=3383938" இருந்து மீள்விக்கப்பட்டது