உப்பலபாடு பறவைகள் சரணாலயம்
உப்பலபாடு பறவைகள் சரணாலயம் (Uppalapadu Bird Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் நகரத்திற்கு அருகில் உள்ள உப்பலபாடுவில் அமைந்துள்ளது. சைபீரியா, ஆத்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து குடிபெயர்ந்த மஞ்சள் மூக்கு நாரைகள், கூழைக்கடாக்கள் மற்றும் பிற பறவைகள் கிராம நீர்நிலைகளை கூடு கட்ட பயன்படுத்துகின்றன. [1]
இந்த சரணாலயம் 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிறுவப்பட்டது. 2002 ஆம் ஆண்டில், உப்பலபாடு பறவைகள் சரணாலயம் குளம் வனத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது கிராம சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. பறவைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற சூழல் இருப்பதாலும், அவைகளுக்கான உணவு கிடைப்பதாலும் பெருமளவு பறவைகள் இங்கு வருகின்றன. இது சீனா, நேபாளம், இமயமலை, நைஜீரியா, இலங்கை, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பறாவைகளின் புகழிடமாகும்.
இந்த நீர்நிலைகளில் பறவைகளின் எண்ணிக்கை முன்பு சுமார் 12,000 ஆக இருந்தது. இருப்பினும் தற்போது குறைந்து வரும் வாழ்விடம் காரணமாக சமீபத்தில் சுமார் 7000 பறவைகள் மட்டுமே இந்த ஆண்டு வாழ்விடத்தில் வளர்கின்றன. ஆனால் செயற்கை மரங்களைச் சேர்ப்பது, உள்ளூர் விழிப்புணர்வு, குளங்களுக்கு சரியான நீர் வழங்கல் போன்ற சில முயற்சிகளும் நடந்துள்ளன. [2] [3] கூழைக்கடாக்களின் எண்ணிக்கை 1500 க்கும் அதிகமாக இருக்கலாம். [4]
அணுகல்[தொகு]
குண்டூரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உப்பலபாடு அமைந்துள்ளது. இது பெடகாகனி மண்டலத்தில் அமைந்துள்ளது. சாலை வழியாகவே இதை அடைய முடியும். தவிர வேறு எந்த தொடர் வண்டி வசதியும் இல்லை. விமானம் மூலம் கன்னவரத்தை அடைந்து வேறு வாகனம் மூலம் 52 கி.மீ. பயணித்து இந்த இடத்தை அடையலாம். தொடர் வண்டி வசதி குண்டூர் வரை உள்ளது. அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் இந்த பறாவிகள் சரணாலயம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Uppalapadu Bird sanctuary". Archived from the original on 2006-12-14. https://web.archive.org/web/20061214203542/http://www.hindu.com/2005/07/20/stories/2005072003050200.htm.
- ↑ "Preparing for the Winged visitors". Online edition of The Hindu (Chennai, India). 2007-07-11. Archived from the original on 2007-11-20. https://web.archive.org/web/20071120142743/http://www.hindu.com/2007/07/11/stories/2007071157360500.htm.
- ↑ "Siberian birds attract visitors". Online edition of The Hindu (Chennai, India). 2006-12-29. Archived from the original on 2007-01-04. https://web.archive.org/web/20070104041626/http://www.hindu.com/2006/12/29/stories/2006122909350200.htm.
- ↑ "Villagers come to aid of Uppalapadu bird sanctuary". The Hindu (Chennai, India). 2005-07-20. Archived from the original on 2006-12-14. https://web.archive.org/web/20061214203542/http://www.hindu.com/2005/07/20/stories/2005072003050200.htm.