உள்ளடக்கத்துக்குச் செல்

கொட்டங்குளங்கரா தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலவர் கருவறை
கோயிலின் முகப்பு
கோயிலுக்குள் பக்தர்கள்

கொட்டாங்குளங்கரா தேவி கோயில் இந்தியாவின் கேரளாவில் சாவரா கிராமத்தில் அமைந்துள்ள சக்தியின் தாயான துர்கா பகவதி அல்லது ஆதி சக்தி தேவிக்கான இந்துக் கோயிலாகும் .

வரலாறு[தொகு]

கோயில் அமைந்துள்ள நிலம் ஒரு காலகட்டத்தில் காடுகளின் ஒரு பகுதியாக இருந்தது.அக்கம் பக்கத்திலுள்ள மாடு மேய்ப்பவர்கள் தம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக அங்கு ஒன்று கூடுவார்கள்.

புராணம்[தொகு]

மாடு மேய்ப்பவர்களுக்கு அங்கு ஒரு தேங்காய் கிடைத்தது. அருகில் இருந்த கல்லில் தேங்காயை அடித்தபோது கல்லில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்தக் கல்லில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும், கோயிலைக் கட்டிய உடனேயே பூசைளைத் தொடங்க வேண்டும் என்றும் ஜோதிடர் பரிந்துரைக்கவே, அங்கு ஒரு தற்காலிக கோயிலைக் கட்டினார்கள். அங்கிருந்த முறைப்படிமாடு மேய்ப்பவர்கள் பெண் வேடமிட்டு, பூசை செய்தனர். தேங்காய் துருவலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் திரவத்தை காய்ச்சி, மருந்து எண்ணெய் எடுத்து, அதை அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்தனர். [1] [2]

திருவிழாக்கள்[தொகு]

ஆண்டுதோறும் கோட்டங்குளங்கர திருவிழா (அல்லது கொட்டாங்குளங்கர சமயவிளக்கு), [3] [4] [5] குருத்தோலைப் பந்தல், ஜீவித நல்லாத்து உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temple History". Kottankulangara Temple. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013."Temple History".
  2. "Sri Bhagavati-Devi: Goddess of Crossdressing". பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
  3. "Temple Festival". Kottankulangara Temple. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
  4. "Kerala temple: Where the lady with the lamp is a man". NDTV. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
  5. "Kottankulangara Chamayavilakku". Kerala Festival Wiki. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.

வெளி இணைப்புகள்[தொகு]