கொட்டகுள்ளி பாக்கியலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டகுள்ளி பாக்கியலட்சுமி (Kottagulli Bhagya Lakshmi)(பிறப்பு 1984) ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

பாக்கியலட்சுமி 2004ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் படேருவில் பிறந்தார். இவரது தந்தை கொட்டகுள்ளி சிட்டிநாயுடு ஒரு விவசாயி. இவர் 2006ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்திலிருந்து முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.[1] நரசிங்க ராவ் என்பவரை மணந்த[2] பாக்கியலட்சுமிக்கு விவேக் வர்தம் என்ற மகனும், ஜசுமிதா சிறீ என்ற மகளும் உள்ளனர்.

அரசியல்[தொகு]

பாக்கியலட்சுமி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு[3][4] தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தற்போது விசாகப்பட்டினத்தின் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பாடேரு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆந்திர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kottagulli Bhagya Lakshmi(YSRCP):Constituency- PADERU(VISAKHAPATNAM) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  2. "Member's Information - Legislative Assembly - Liferay DXP". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  3. "Paderu Assembly Election Results 2019 Live: Paderu Constituency (Seat) Election Results, Live News". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  4. "LIVE పాడేరు అసెంబ్లీ ఎన్నికలు 2019, Andhra Pradesh | Paderu Assembly Election Result 2019 | Winner MLA, Leading-Trailing Runner-up Candidates List, Vote Margin, Paderu Previous Results". பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  5. "YSRC proves a point with 10 women MLAs and 4 MPs". https://timesofindia.indiatimes.com/city/vijayawada/ysrc-proves-a-point-with-10-women-mlas-and-4-mps/articleshow/69471910.cms. 

வெளி இணைப்பு[தொகு]

ஆந்திர சட்டமன்றத்தில் கே.பாக்ய லட்சுமி