கைலி
தோற்றம்

கைலி (இலுங்கி அல்லது சாரம்) என்பது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய சரோங்கைப் போன்ற ஒரு ஆடையாகும்.[1] லுங்கி, பொதுவாக பல வண்ணங்களில் இருக்கும், தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யெமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடை ஆகும். சில இடங்களில் பெண்களும் அணிவதுண்டு. எத்தியோப்பியா நாட்டில் அபார் எனும் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் இவ்வகை ஆடைகளை அணிகிறார்கள். இது வண்ணமயமான ஆடையாகும். வெப்பமான நிலப்பகுதிகளில் பிற ஆடைகளை விட கைலி காற்றோட்டமுள்ளதாக உணரப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nazareth, Samir (2015). 1400 Bananas, 76 Towns & 1 Million People. Wordizen Books. p. 221. ISBN 978-93-81115-80-0.
- ↑ Mayank Austen Soofi (2018-03-06). "Delhiwale: The lungi aesthete". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2018-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180306203345/https://www.hindustantimes.com/delhi-news/delhiwale-the-lungi-aesthete/story-WSqux4RAeuqTchVJapiX4L.html. "For men in hot and humid cities such as Delhi, [the lungi] is said to be a most appropriate way to ventilate the legs."