கையறுநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கையறுநிலை என்னும் துறைக் குறிப்புடன் புறநானூற்றில் 41 பாடல்கள் உள்ளன.

கை என்னும் சொல் ஆகுபெயராய் அதன் செயலைக் குறிக்கும். தலைவனை இழந்து செயலற்று நிற்பது ‘கையறுநிலை’.

வடக்கிருந்தோரைக் கண்டு பாடியவை[தொகு]

இறந்த அரசனை எண்ணிப் பாடியவை[தொகு]

பாடிய பாடல்கள், பேணிய அரசனை இழந்த புலவர்கள் பாடியவை.

மாண்ட வல்லாளனை எண்ணி வருந்தியவை[தொகு]

 • மீளியாளன் ஆனிரை தந்து அரிது செல் உலகுக்குச் சென்றனன். பாண! செல்லும் வழியில் கள்ளி நிழல் தரும் பந்தலின் கீழ் நடுகல் ஆயினன். ஆற்றங்கரைக் கம்பத்தில் ஏற்றப்பட்ட விளக்கு காற்றில் அவிந்து நிற்பது போல் அவன் நடுகல் உள்ளது. அதற்கு மயில் பீலி சூட்டிச் செல்லுங்கள்.[21]
 • ஆனிரை தந்தவன் கல்லாயினான். அவனது வீட்டு முற்றத்தில் அவன் மனைவி மயிர் கொய்த தலையோடு நீரில்லாத ஆற்றுமணலில் கிடக்கும் அம்பி போலக் காணப்படுகிறாள்.[22]
 • பாண! ஒருகண் மாக்கிணை முழக்கிக்கொண்டு செல்லும்போது, வழியில், ஆனிரை மீட்பதில் வெள்ளத்தைத் தடுக்கும் கற்சிறை போல விளங்கியவனின் நடுகல் இருக்கும். அதனைத் தொழுது செல்லுங்கள்.[23]
 • ஆனிரை தந்து, ஆனிரை மீட்டுப் பாணர்களைப் பேணிய அவனுக்குப் பெயர் பொறித்துக் கல் நட்டு மயில் பீலி சூட்டி வழிபடுகின்றனர். [24]
 • கோவலர் வேங்கைப் பூமாலை சூட்ட நடுகல் ஆயினன்.[25]
 • நவி (கோடாரி) பாய்ந்துகிடக்கும் மரம் போல வாள் பாய்ந்து கிடப்பவனைப் பாடியது.[26]

அடிக்குறிப்பு[தொகு]

 • எண்கள் புறநானூற்றுப் பாடல் எண்ணூக் குறிப்பன.
 1. 65
 2. 236
 3. 217,
 4. 218,
 5. 219,
 6. 220, 221, 222, 223,
 7. 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120,
 8. 224,
 9. 225,
 10. 226,
 11. 227,
 12. 230,
 13. 231, 232, 235,
 14. 233, 234,
 15. 237, 238,
 16. 239,
 17. 240,
 18. 241,
 19. 242,
 20. 243
 21. வடமோதங்கிழார் 260
 22. ஆவூர் மூலங்கிழார் 261
 23. மதுரைப் பேராலவாயார் 263
 24. உறையூர் இளம்பொன் வாணிகனார் 264
 25. சோணாட்டு முகையலூர்ந் சிறுகருந்தும்பியார் 265
 26. கழாத்தலையார் 270
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையறுநிலை&oldid=1562390" இருந்து மீள்விக்கப்பட்டது