கே. பி. தாமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.பி. தாமசு
K. P. Thomas
பிறப்பு1943 (1943)
வழித்தலா, இடுக்கி மாவட்டம், கேரளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
பணிதடகளப் பயிற்சியாளர்
விருதுகள்துரோணாச்சாரியர் விருது

கே.பி. தாமசு (K. P. Thomas) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு தடகளப் பயிற்சியாளர் ஆவார். இவர் மாசு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 2013 ஆம் ஆண்டில், விளையாட்டுப் பயிற்சிக்கான இந்தியாவின் உயரிய விருதான துரோணாச்சாரியர் விருதைப் பெற்றார். துரோணாச்சாரியர் பட்டத்தை வென்ற முதல் உடற்கல்விப் பயிற்றுவிப்பாளர் கே.பி. தாமசு என்பது குறிப்பிடத்தக்கதாகும். .

வாழ்க்கை[தொகு]

குரிசிங்கல் பிலிப் தாமசு 1943 ஆம் ஆண்டில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வழித்தலாவில் பிறந்தார்.[1][2]

தாமசின் மூத்த மகள் இராஜி, இரண்டாவது மகள் இரஜனி மற்றும் மகன் இராஜசு ஆகிய மூவரும் விளையாட்டு வீரர்கள் ஆவர்.[3]

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

தாமசு பல தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ, 200மீ மற்றும் 400 மீ ஓட்டங்களில் இந்தியப் படைத்துறையின் பேராளராகப் பங்கேற்றார். மேலும் 1967 ஆம் ஆண்டு சேவைத் துறை சந்திப்புப் போட்டிகளில் [2] இவர் சாதனையைப் படைத்தார். 1972 ஆம் ஆண்டு தாமசு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் பேராளராகப் பங்கேற்றார்.[4]

பயிற்சி வாழ்க்கை[தொகு]

தாமசு 1963 [3] ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை இந்தியப படைத்துறைப் பயிற்சியாளராக இருந்தார். படைத்துறையை விட்டு வெளியேறிய பிறகு, 1979 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, கோட்டயம் மாவட்டம் கொருத்தோட்டில் உள்ள கொருதோடு சி கேசவன் நினைவு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றினார்.[5] தாமசின் முயற்சியால் தொடர்ந்து 17 ஆண்டுகளாகக் கேரள மாநிலப் பள்ளித் தடகள வெற்றியாளர் போட்டியில் சிகேஎம் பள்ளி வெற்றியாளர் பட்ட்டத்தை வென்றது.[2] தாமசு அலுவல்முறையில் 2000 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் 2005 ஆம் ஆண்டுவரை [6] பள்ளியின் பயிற்சியாளராக தொடர்ந்தார். கொருதோடு பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற தாமசு சிறிது காலம் எந்தையார் பள்ளியில் பயிற்சியாளராகச் சேர்ந்தார், தற்போது தொடுபுழா வண்ணப்புரம் எசுஎன்எம்வி மேல்நிலைப் பள்ளியில் பயிற்சியாளராக இருக்கும் தனது மகன் ராஜாசுடன் சேர்ந்து குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.[3]

உலக மலையாளி மன்றம் தாமசு விளையாட்டுக் கல்விக்கழகம் என்ற அமைப்பை 2015 ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்ணப்புரத்தில் உலக மலையாளி மன்றக் குழுவின் உதவியுடன் தொடங்கியது.

சைனி வில்சன், அஞ்சு பாபி சியார்ச்சு , ஜின்ஸ் பிலிப், மோலி சாக்கோ, சி.எசு.முரளிதரன், இயோசப் ஆபிரகாம் உட்பட இந்தியாவுக்காக பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்ற பல ந்தன்மை விளையாட்டு வீரர்கள் தாமசின் மாணாக்கர்கள் ஆவர்.[3][7] நெடுந்தொலைவு ஓட்டப் பயிற்சிக்கு வந்திருந்த அஞ்சு பாபி சியார்ச்சை வேறுதிசைக்குத் திருப்பியதும் இவரேயாவார்.[8]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

2013 ஆம் ஆண்டில், விளையாட்டுப் பயிற்சிக்காக வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான துரோணாச்சாரியர் விருதைப் பெற்றார்.[9] துரோணாச்சாரியார் பட்டத்தை வென்ற முதல் உடற்கல்வி ஆசிரியரும் பயிற்சியாளர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.[5][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ജീവിതത്തിന്റെ ട്രാക്ക്; എഴുപത്തഞ്ചാം ലാപ്പ്". https://www.manoramaonline.com/sports/other-sports/2018/05/05/story-about-thomas-mash.html. 
  2. 2.0 2.1 2.2 "Guru gets his credit | More sports News - Times of India" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/guru-gets-his-credit/articleshow/21717850.cms. Aug 9, TNN /. "Guru gets his credit | More sports News - Times of India". The Times of India.
  3. 3.0 3.1 3.2 3.3 "തോമസ് മാഷിന് ദ്രോണാചാര്യ" இம் மூலத்தில் இருந்து 2013-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130809011936/http://www.mathrubhumi.com/sports/story.php?id=382670. 
  4. "പതിനേഴിന്റെ ഉശിരുമായി അറുപത്തേഴിലും തോമസ് മാഷ്". Mathrubhumi. 1 December 2011 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111201130222/http://www.mathrubhumi.com/idukki/news/1309111-local_news-Thodupuzha-%E0%B4%A4%E0%B5%8A%E0%B4%9F%E0%B5%81%E0%B4%AA%E0%B5%81%E0%B4%B4.html. 
  5. 5.0 5.1 "KP Thomas: The first-ever PE instructor to win the Dronacharya" (in en). இந்தியன் எக்சுபிரசு. 1 September 2013. https://indianexpress.com/article/news-archive/print/kp-thomas-the-firstever-pe-instructor-to-win-the-dronacharya/. 
  6. "കെ.പി തോമസിന് ദ്രോണാചാര്യ പുരസ്‌കാരം". KVARTHA: MALAYALAM NEWS | KERALA NEWS | KERALA VARTHA | ENTERTAINMENT ചുറ്റുവട്ടം മലയാളം വാര്‍ത്തകൾ. https://www.kvartha.com/2013/08/kp-thomas-get-dronacharya-award.html. 
  7. "The true DRONACHARYA". தி இந்து. 4 September 2013. https://www.thehindu.com/features/metroplus/the-true-dronacharya/article5092941.ece. 
  8. "അഞ്ജു മുതല്‍ രാജാസ് വരെ; ഓര്‍മകളുടെ ട്രാക്കില്‍ തോമസ് മാഷ്". Asianet News Network Pvt Ltd. https://www.asianetnews.com/sports/school-athletic-meet-thomas-mash. 
  9. "A coach with a great reputation" (in en). sportstar.thehindu.com. 27 September 2013. https://sportstar.thehindu.com/magazine/a-coach-with-a-great-reputation/article29712522.ece. 
  10. "K.P. Thomas: Truly a modern-day Dronacharya". The Daily Guardian. 4 September 2020. https://thedailyguardian.com/k-p-thomas-truly-a-modern-day-dronacharya/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._தாமசு&oldid=3799045" இலிருந்து மீள்விக்கப்பட்டது