கே. பி. ஏ. சி. லீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பி. ஏ. சி. லீலா
பிறப்புலீலா
பம்பாகுடா, எர்ணாகுளம், கேரளம், இந்தியா
பணி
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1962– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
டேவிட்

கே. பி. ஏ. சி. லீலா (K. P. A. C. Leela) மலையாள நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்ட ஓர் இந்தியா நடிகை ஆவார். இவர் கேரள சங்கீத நாடக அகாதமி வழங்கிய குரு பூஜா விருதைப் பெற்றுள்ளார்.[1] கேரள மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் குழு ரௌத்ரம் (2018) படத்தில் இவரது நடிப்பிற்காக ஒரு சிறப்பு குறிப்பை வழங்கியது.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

மூவாற்றுப்புழை அருகேயுள்ள பிரவம் என்ற கிராமத்தில் பொதுவுடமைவாதிகளான குரியாகோஸ் மற்றும் மரியம்மா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[4] இவர் கேரள கலாமண்டலத்தில் சேர்ந்து சிறிது காலம் நடனம் பயின்றார். முந்திரிச்சரில் குரே என்ற நாடகத்தில் தெரசா என்ற கதாநாயகியாக இவர் முதலில் நடித்தார். பின்னர், இவர் கேரள மக்கள் கலை மன்றத்தில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார், தோப்பில் பாசியின் பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். புதிய ஆகாசம் புதிய பூமி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். முடினயா புத்ர, அம்மாய் வந்தனா, ஆத்யபிகா உள்ளிட்ட பிற படங்களிலும் தோன்றினார். 1970 களில் திரையுலகில் நடிப்பதிலிருந்து சில காலம் விலகியிருந்தார்.[5] கேரள மக்கள் கலை மன்றத்தில் இசைக் கருவியாளரான டேவிட் என்பவரை மணந்தார்.[6][7]

ஒரு பென்னும் ராண்டானும் படத்தில் மரியா என்ற பாத்திரத்தின் மூலம் லீலா மீண்டும் நடிக்க வந்தார். [2] தொடர்ந்து, 2018 இல் ரெளத்ரம் படத்தில் மேரிக்குட்டி வேடத்தில் நடித்தார். 2019இல் வெளியான இந்தப் படம், 2018இல் கேரளா எதிர்கொண்ட [[வெள்ளத்தின் உண்மைக் கதையை சித்தரிக்கிறது.[8] 2023 ஆண்டில், பூக்களம் படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[9]

சொந்த வாழ்க்கை[தொகு]

கேரள மக்கள் கலை மன்றத்தில் இசைக் கருவியாளராக பணியாற்றிய டேவிட் என்பவரை மணந்தார்.[6]

விருதுகள்[தொகு]

கேரள சங்கீத நாடக அகாதமியின் குரு பூஜா விருதைப் பெற்றுள்ளார். 2018 இல் ரௌத்ரம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. vipinvk. "'വിജയരാഘവൻ എന്നേക്കാള്‍ ചെറുപ്പമാണ്'! 'പൂക്കാല'ത്തിലെ കൊച്ചുത്രേസ്യാമ്മയായി അമ്പരപ്പിച്ച കെപിഎസി ലീല". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  2. 2.0 2.1 ചന്ദ്രൻ, ബൈജു (2023-09-11). "നടന ലീല --3 | Madhyamam". www.madhyamam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  3. 3.0 3.1 "KPAC Leela wins best actress award for her role in Roudram". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  4. Daily, Keralakaumudi. "Pookalam again, with the details of being active in the cinema again". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  5. Web Desk (2023-03-03). "100 വയസ്സുകാരനായി ഞെട്ടിക്കാൻ വിജയരാഘവൻ; കൂടെ കെ.പി.എ.സി ലീലയും! 'ഹ്യൂമൻസ് ഓഫ് പൂക്കാലം' പുറത്തിറങ്ങി". www.mediaoneonline.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  6. 6.0 6.1 Entertainment, The Cue (2023-04-09). ". "'Even if you play a hundred dramas, you are afraid to take a shot'; KPAC Leela said that Ganesh was told to control if drama comes"". The Cue (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  7. "ഒക്ടോബർ 30 ചിത്രങ്ങളിലൂടെ". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-10-29. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  8. "Roudram 2018 Movie: साउथ की इस फिल्‍म ने काहिरा फेस्टिवल में इंट्री की, केरल की बाढ़ पर केंद्रित है फिल्‍म की कहानी - Malayalam Filmmaker Jayaraj Movie Roudram 2018 Screened In Cairo film festival". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  9. "ചിരിപ്പിച്ചും ഈറനണിയിച്ചും മനസ്സ് നിറയ്ക്കും ഈ 'പൂക്കാലം' | POOKKALAM REVIEW". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-11-18. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._ஏ._சி._லீலா&oldid=3907314" இலிருந்து மீள்விக்கப்பட்டது