உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சி. தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சி. தாசு பேரன் தனியார் நிறுவனம்
உருவாக்கம்1956
தலைமையகம்
நிறுவனர்
தேபேந்திர நாத் தாசு
தயாரிப்புகள்s)
இனிப்பு (இரசகுல்லா-சிறப்பு)
வலைத்தளம்kcdas.com

கே. சி. தாசு என்பது கே. சி. தாசு பேரன் தனியார் நிறுவனம் (K.C. Das Grandson Pvt. Ltd.) என்றும் அறியப்படுகிறது. இந்நிறுவனம் இனிப்பு மற்றும் சிற்றுண்டிகளுக்குப் பிரபலமான ஓர் இந்திய மிட்டாய் நிறுவனம் ஆகும். இது குறிப்பாக வங்காளத்தில் இரசகுல்லாவின் வெள்ளை பஞ்சுபோன்ற வடிவத்திற்காக அறியப்படுகிறது, இது நிறுவனரின் மூதாதையரான நோபின் சந்திர தாசால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2][3][4]

வரலாறு

[தொகு]

1868-இல், கொல்கத்தாவைச் சேர்ந்த நோபின் சந்திர தாசு, முதன் முறையாக இசகுல்லாவை சோதனை முறையில் உருவாக்கினார்.[5][6][2] இதைத் தொடர்ந்து, நோபின் தாசின் மகனான கே. சி. தாசு, இரசகுல்லாவை கலனில் அடைத்து விற்பனைச் செய்யத் தொடங்கினார், இதன் விளைவாக இந்த இனிப்பு பரவலாகக் கிடைத்தன. இவரது மகன், சாரதா சரண் தாசு, கே. சி. தாசு தனியார் நிறுவனம் என குடும்ப நிறுவனங்களை ஒருங்கிணைத்து நிறுவினார். மேலும் வணிகத்தில் புரட்சிக்கும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 1955ஆம் ஆண்டில், சாரதா சரண் தனது இரண்டாவது மகன் தேபேந்திர நாத் தாசுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாகக் குடும்பத்திற்குள் நிரந்தரமான பிரிவினைக்கு வழிவகுத்தது.[7] தேபேந்திர நாத் தாசு குடும்பத்தை விட்டு வெளியேறி காளிகாட்டில் தனது சொந்த இந்திய மிட்டாய்க் கடையை நிறுவினார், இதற்கு இவரது மறைந்த தாத்தாவின் நினைவாக "கே. சி. தாசு பேரன்" என்று பெயரிட்டார்.[8]

ஏற்றுமதி

[தொகு]

கே. சி. தாசு பேரனின் தயாரிப்புகள் வங்காளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, வங்களாதேசம் போன்ற பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Telegraph - Calcutta : Metro". Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  2. 2.0 2.1 "Nobin Chandra Das Inventor of Rossogolla" – via www.youtube.com.
  3. "Chatterbox: Rosogolla – Ancient Bengali Sweet?". 7 April 2012.
  4. "A sweet rush". The New Indian Express.
  5. "Calcutta celebrates Madly Mishti - Times of India". 11 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/news/calcutta-celebrates-madly-mishti/articleshow/4902875.cms. 
  6. "Sticky Sweet Success". Indian Express. 2011-10-30. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
  7. Sarada Charan Das
  8. "History Of Rasgulla - Origin Of Rasgulla, Interesting Information On Background Of Rasgulla". lifestyle.iloveindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._தாசு&oldid=3895328" இலிருந்து மீள்விக்கப்பட்டது