உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள பொன்முதுகு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள பொன்முதுகு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dinopium benghalense tehminae) என்பது பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும்.[1] இந்த துணையினத்திற்கு சாலிம் அலியின் மனைவியின் பெயர் இடப்பட்டது. இப்பறவை கேரளத்திலும், கருநாடகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

கேரள பொன்முதுகு மரங்கொத்தியானது தோற்றத்திலும் அளவிலும் பெரும்பாலும் தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தியை ஒத்ததாக இருக்கும். இதன் முதுகு ஆலிவ் கலந்த பொன் மஞ்சளாக இருக்கும். முன்னதன் முதுகு ஆரஞ்சு தோய்ந்த பொன் மஞ்சளாக இருக்கும். பழக்க வழக்கங்கள், இனப்பெருக்கம் போன்றவை தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தியைப் போன்றே இருக்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Woodpeckers". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
  2. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 325.