உள்ளடக்கத்துக்குச் செல்

கேப்டன் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேப்டன் மில்லர் (Captain Miller) 2024 இல் பொங்கல் வெளியீடாக வெளிவந்த காவிய- அதிரடித் திரைப்படம் ஆகும். அருண் மாதேசுவரன் இயக்கிய இப்படத்தை சத்ய ஜோதி படங்கள் தயாரித்திருந்தது. இப்படத்தில் தனுஷ் உடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சுதீப் கிஷன், ஜான் கொக்கன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

திரைப்படத்தின் பெரும்பகுதி தென்காசியில் படமாக்கப்பட்டது.

திரைப்படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2022 செப்டம்பர் 21 அன்று வி. எம். சுடுடியோவில் தொடங்கப்பட்டது. [1] [2]

இசை[தொகு]

இத்திரைப்படத்தில் தனுஷ், ஜி. வி. பிரகாஷ் குமார் ஏழாவது தடவையாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.  ஜி. வி. பிரகாஷ் குமார் முதன் முறையாக இயக்குநர் அருண் மாதேசுவரன் உடன் இணைந்திருக்கிறார். [3]

திரையரங்க வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் 2024 சனவரி 12 இல் தமிழர் திருநாளான பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வெளியீடு[தொகு]

வெளியீடு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது.

எதிர்காலம்[தொகு]

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஒரு பேட்டியில் இக்கதையை அடிப்படையாகக் கொண்டு மூன்று பகுதியாக எடுக்கத் திட்டம் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhanush's 'Captain Miller' starts rolling". 21 September 2022 இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924085605/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dhanushs-captain-miller-starts-rolling/articleshow/94353069.cms. 
  2. "Dhanush's Captain Miller Goes On Floors With A Muhurat Pooja". 22 September 2022. Archived from the original on 6 October 2022. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  3. "GV Prakash teases fans with an interesting update on Dhanush's 'Captain Miller'". 29 March 2023 இம் மூலத்தில் இருந்து 18 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230418080756/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/gv-prakash-teases-fans-with-an-interesting-update-on-dhanushs-captain-miller/articleshow/99086526.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_மில்லர்&oldid=3986568" இலிருந்து மீள்விக்கப்பட்டது