கெஆபொ-74

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெஆபொ-74 (KOI-74) ( KIC 6889235 ) என்பது சிக்னசு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு ஒளிமறைப்பு இரும விண்மீனாகும். முதன்மை நட்சத்திரம் 9,400 K (9,130 °C; 16,460 °F) கெ வெப்பநிலையுடன் A-வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இது கெப்ளர் திட்டத்தின் நோக்கீட்டுத் துறையில் உள்ளது. மேலும், முதன்மை விண்மீனை விட சிறியதாகவும் வெப்பமாகவும் இருக்கும். இதன் வட்டணையில் இணைக் கோளை வைத்திருப்பதும் உறுதியானது.

கெஆபொ-74பி[தொகு]

KOI-74b என்பது கெஆபொ-74 விண்மீனைச் சுற்றி வரும் ஒரு சூடான சிறிய கோள். இது 2010 ஆம் ஆண்டில் கெப்ளர் திட்டம் வழி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சிறிய அளவு (அதன் ஆரம் சூரிய ஆரம் 4.3% மட்டுமே). இது 13,000 K (12,700 °C; 22,900 °F) வெப்பநிலை காரணமாக கவனத்திற்கு வந்தது. முதன்மை விண்மீனைச் சுற்றி கெஆபொ-74பி 5.18875 நாட்கள் வட்டணைநேரத்தில் சுற்றிவருகிறது.. கெப்ளர் தரவுகளில் ஒளியின் சார்பியல் ஊக்குவிப்பு பகுப்பாய்வு, அது தோராயமாக 0.22 சூரியப் பொருண்மைய்யைக் கொண்ட குறைந்த பொருண்மை வெண்குறுமீனாக இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது, இது ஒரு இரும அமைப்பில் முந்தைய பெருங்கோள் வ்கட்ட பொருண்மைப் பரிமாற்றத்தின் விளைவாக உருவான கோள் ஆகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • கெஆபொ-81 கெப்ளர் தைட்டம் கண்டறிந்த கோள்.
  • கெப்ளர் ஆர்வப் பொருள்கெப்ளர் திட்டக் கோள்கடப்பு வழி நோக்கீடு செய்த பொருள்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஆபொ-74&oldid=3829964" இலிருந்து மீள்விக்கப்பட்டது