நிறை மாற்றவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரவுகை செயலாக்கத்தில் நிறை மாற்றம் ஏற்படும் காட்சியை நீரிலே மஞ்சள் நிறப் பொடி பரவுதலை வைத்துக் காணலாம்.

நிறை மாற்றவியல் (Mass Transfer) என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நிறையை மாற்றும் அல்லது செலுத்தும் நிகழ்வைக் குறிப்பதாகும். மாறும் நிறையானது முழுப்பொருளாக ஓடையாகவோ, வாகையாகவோ, அல்லது சில பின்னங்களாகவோ இருக்கலாம். உட்கவர்தல், ஆவியாதல், காய்தல், சவ்வின்வழி வடிகட்டல், சவ்வூடு பரவல், வடித்திறக்கல் போன்ற பல வேதிச் செயல்முறைகளில் நிறைமாற்றத்தைக் காணலாம்.

ஒரு குளத்தில் இருந்து ஆவியாகும் நீர்; சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் தூய்விக்கப்படும் குருதி; போன்றவை அன்றாட நிகழ்வுகளில் காணப்படும் சில நிறை மாற்றச் செயல்கள். தொழிலகங்களில் காணப்படும் நிறை மாற்றச் செயல்களுள் சில: வடித்திறக்கல் கோபுரங்களில் வேதிப் பொருட்களை அவற்றின் கொதிநிலை வேறுபாடுகளை வைத்துப் பிரித்தல், உட்கவர் கோபுரங்களில் நிகழும் மாற்றங்கள், போன்றவை. குளிர்விக்கும் கோபுரங்களில் சுடு நீரைக் குளிர்ந்த காற்றினைக் கொண்டு குளிர வைக்கும் செயல்முறையில் நிறை மாற்றமும் வெப்ப மாற்றமும் சேர்ந்தே காணப்படும்.

வேதிப் பொறியியல்[தொகு]

வேதிப் பொறியியல் துறையில் நிறை மாற்றவியல் பெரிதும் பயன்படுகிறது. வேதிவினைப் பொறியியல், பிரித்தல் பொறியியல், வெப்ப மாற்றவியல், போன்ற பல உள் துறைகளில் நிறை மாற்றவியல் பயன்படுகிறது.

சில வெப்ப இயக்கவியல் காரணங்களால் நிறை மாற்றம் நிகழலாம் என்றாலும், நிறை மாற்றத்திற்கான ஆதார காரணம் வேதிப்பண்பில் அமைந்திருக்கும் வேறுபாடுகளே. ஒரு வேதிப் பொருள் உயர் வேதிப்பண்பு உள்ள இடத்தில் இருந்து குறைந்த வேதிப்பண்பு உள்ள இடத்திற்கு மாறுவது இயல்பு. அதனால் நிறைமாற்றத்தின் உச்ச அளவைத் தீர்மாணிப்பது இரண்டு இடங்களுக்கு இடையே வேதிப்பண்பில் ஏற்படும் சமநிலையே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறை_மாற்றவியல்&oldid=1340396" இலிருந்து மீள்விக்கப்பட்டது