உள்ளடக்கத்துக்குச் செல்

கூடையாணிமூடு சாமுண்டி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடையாணிமூடு சாமுண்டி கோவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், வெள்ளநாடு பஞ்சாயத்தில், கூட்டயாணிமூடு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில் ஆகும். [1] இந்த பழமையான கோவில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கோயில் துர்கா/சக்தியின் வடிவமான சாமுண்டீஸ்வரி தேவிக்கான கோயிலாகும். இக்கோயில், மாநிலத்தின் பழமையான கோவில்களில் ஒன்றாகும்.

சமயப் பின்னணி

[தொகு]

சாமுண்டா தேவி துர்காவின் கோபமான வடிவமாகக் கருதப்படுகிறார். இருப்பினும் அவர் தனது உண்மையான பக்தர்களிடம் கருணை காட்டுகிறாள்.

'சாமுண்டா' என்ற சொல்லானது 'சண்டா' மற்றும் 'முண்டா' ஆகிய இரண்டு சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். புராண இதிகாசங்களின்படி, சண்டா மற்றும் முண்டா ஆகிய அரக்கர்களைக் கொல்ல துர்கா தன்னுடைய சக்தியால் ஒரு தேவியை உருவாக்கினாள். தேவி தன் அபார சக்தியால் அசுரர்களைக் கொன்றாள். இதனால் மகிழ்ச்சியடைந்த துர்க்கா, அவர் சாமுண்டா என்று அழைக்கப்படுவாள் என்றாள்.

விழாக்கள்

[தொகு]

இக்கோயிலில் தசரா பண்டிகையை ஒத்த பூஜா வைப்பு, மலையாள நாட்காட்டி ஆண்டின் கடைசி மாதமான கர்கிடகத்தில் நடத்தப்படும் 31 நாள் திருவிழாtன ராமாயண மாசச்சரணம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]