கூச முனிசாமி வீரப்பன் (தொ. கா தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூச முனிசாமி வீரப்பன்
வகைஉண்மைக் குற்றவியல் தொலைக்காட்சி ஆவணப்படம்
உருவாக்கம்ஜெயச்சந்திர ஆசுமி, பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன்
மூலம்வீரப்பன்
எழுத்துஜெயச்சந்திர ஆசுமி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன்
இயக்கம்சரத் ஜோதி
இசைசதீஷ் ரகுநாதன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்6
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்பிரபாவதி ஆர்.வி
ஒளிப்பதிவுராஜ் குமார் பி.எம்
தொகுப்புஇராம் பாண்டியன்
ஓட்டம்256 mins
தயாரிப்பு நிறுவனங்கள்தீரன் புரொடக்சன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ5
ஒளிபரப்பான காலம்14 திசம்பர் 2023 (2023-12-14)

கூச முனிசாமி வீரப்பன் (Koose Munisamy Veerappan) என்பது ஜெயச்சந்திர அசுமி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஜீ5 [1] இன் 2023 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி உண்மை குற்ற ஆவணப்படமாகும். இதை சரத் ஜோதி இயக்க, பிரபாவதி ஆர்வி தயாரித்துள்ளார். இது 14 திசம்பர் 2023 அன்று திரையிடப்பட்டது. [2] [3] [4] நக்கீரன் கோபாலால் படம்பிடிக்கப்பட்டு நக்கீரன் இதழால் காப்பகப்படுத்தப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்தி இந்தத் தொடர் வீரப்பனின் வாழ்க்கையை ஆராய்கிறது.

பருந்துப் பார்வை[தொகு]

இந்தத் தொடர் பிரபல வேட்டைக்காரரும், குற்றவாளியுமான வீரப்பனின் வாழ்க்கையை ஆராய்கிறது. மேலும் வீரப்பனின் கதையின் சில பகுதிகளுடன், சில உண்மை வாழ்க்கை காட்சிகளையும் கொண்டுள்ளது. [5] [6]

இந்தத் தொடரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் தன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "வீரப்பனுடன் நேர்காணலை எடுப்பதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளையும், குறிப்பிடத்தக்க இடர்பாடுகளையும் எதிர்கொண்டோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் விரிவான பதிப்பை ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது. கூச முனிசாமி வீரப்பன் என்ற பெயரில் ஜீ மேலதிக ஊடக சேவை தளத்தில் பார்வையாளர்களின் காட்சிக்கு வருகிறது." [7]

அத்தியாயங்கள்[தொகு]

பருவம் 1[தொகு]

No.TitleDirected byWritten byOriginal release date
1"முதல் இரத்தம்"சரத் ஜோதிஜெயச்சந்திரன் ஆசுமி, சரத் சோதி, வசந்த் பாலகிருஷ்ணன்14 திசம்பர் 2023 (2023-12-14)
வீரப்பன் தன் உண்மையான தோற்றத்தைக் காட்டுகிறார். அவர் தனது குடும்பப் பின்னணி மற்றும் குற்ற உலகில் தனது பயணம் பற்றி பேசுகிறார். எது அவரை துப்பாக்கியை ஏந்தவைத்து பயமுறுத்தும் கொள்ளைக்காரனாக மாற்றியது என்பது குறித்து விவரிக்கிறார்.
2"காட்டுக்குள்"சரத் ஜோதிஜெயச்சந்திரன் ஆசுமி, சரத் சோதி, வசந்த் பாலகிருஷ்ணன்
வீரப்பன் தேடப்படும் வேட்டைக்காரனாகவும், கடத்தல்காரனாகவும், கொலைகாரனாகவும் மாறுகிறார். விரைவில், வனத்துறை அதிகாரி சீனிவாசன் வித்தியாசமான திட்டங்களுடன் இவரது வாழ்க்கையில் நுழைகிறார்.
3"போர்"சரத் ஜோதிஜெயச்சந்திரன் ஆசுமி, சரத் சோதி, வசந்த் பாலகிருஷ்ணன்14 திசம்பர் 2023 (2023-12-14)
வீரப்பனால் காயமடைந்த அதிகாரிகள் அவரை வீழ்த்த முடிவு செய்கின்றனர். வீரப்பனுக்கு எதிராக திறமையான அதிகாரிகள் போர் தொடுக்கின்றனர். ஆனால் வீரப்பன் தனது படையுடன் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். அவர்கள் வெற்றி பெற்றார்களா?
4"வேட்டை"சரத் ஜோதிஜெயச்சந்திரன் ஆசுமி, சரத் சோதி, வசந்த் பாலகிருஷ்ணன்14 திசம்பர் 2023 (2023-12-14)
எப்படியும் வீரப்பனை வேட்டையாடி பிடித்தே ஆகிவேண்டும் என்று உறுதியான அதிகாரிகளைக் கொண்ட பெரும் படையை காவல்துறை உருவாக்குகிறது. வேட்டையில் என்ன நடந்தது என்ன?
5"தூண்டில் புழுக்கள்"சரத் ஜோதிஜெயச்சந்திரன் ஆசுமி, சரத் சோதி, வசந்த் பாலகிருஷ்ணன்14 திசம்பர் 2023 (2023-12-14)
வீரப்பனுக்கு எதிரான போர் கடுமையாகும் போது, வீரப்பனையும் மற்றும் அவரது கும்பலையும் ஏமாற்ற காவல்துறை தூண்டில் போடுகிறது. முடிவில் என்ன ஆனது?
6"துவக்கம்"சரத் ஜோதிஜெயச்சந்திரன் ஆசுமி, சரத் சோதி, வசந்த் பாலகிருஷ்ணன்14 திசம்பர் 2023 (2023-12-14)
பல சுற்றுப் போர் நடந்த போதிலும், வீரப்பன் வெல்ல முடியாதவராகவே இருக்கிறார். காட்டில் இருந்து அவராகவே வெளியேற வைப்பதுதான் அவரைப் பிடிக்கும் ஒரே வழியா? வீரப்பனின் அடுத்த நிலை என்ன?

நடிகர்கள்[தொகு]

  • வீரப்பனாக மாகே தங்கம்
  • நக்கீரன் கோபால், பத்திரிகையாளர் (ம) நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர்
  • பா. பா. மோகன், வழக்கறிஞர்
  • ஓய்வுபெற்ற கா.த.இ. அலெக்சாண்டர் இ.கா.ப
  • என். ராம், தி இந்துவின் முன்னாள் ஆசிரியர்
  • சீமான், நா.த.க கட்சி தலைவர்
  • ஜீவா தங்கவேல், பத்திரிகையாளர்
  • ரோகிணி, சமூக செயற்பாட்டாளர்

சந்தைப்படுத்தல்[தொகு]

தொடரின் முன்னோட்டம் 23 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது. [8] [9]

"கூச முனிசாமி வீரப்பன்" முதலில் ஜீ5 இல் 8 திசம்பர் 2023 அன்று திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வெளியீடு திசம்பர் 14ஆம் நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. [10] இந்தத் தொடர் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் பார்க்கக் கிடைக்கும். 

வரவேற்பு[தொகு]

"கூச முனிசாமி வீரப்பன்" பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தி நியூ இந்தியன் எக்சுபிரசு இந்தத் தொடர் "முக்கியமான எதிர் நாயகனின் கதையில் விருவிருப்பான தொடர் கோவை" என்று கருத்து தெரிவித்தது. [11] சவுத் ஃபர்ஸ்ட் வெளியிட விமர்சனத்தில், "உண்மையை அறிய வேண்டுமானால், கூச முனிசாமி வீரப்பன் ஆவணப்படத்தை பார்வையாளர்கள் தவறவிடக்கூடாது." [12] என்.டி.வி. (இந்தியா) இதற்கு 5 நட்சத்திரங்களில் 3 மதிப்பெண்களை அளித்து, பார்க்க வேண்டிய தொடர் என்று அழைத்தது. [13]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ZEE5 announces Tamil original docu-series ‘Koose Munisamy Veerappan’, பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  2. Koose Munisamy Veerappan - Unseen Veerappan Tapes gets a new streaming date, பார்க்கப்பட்ட நாள் 7 December 2023
  3. ‘Koose Munisamy Veerappan OTT release date - When and where to watch the docu-series on Veerappan, பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  4. Docu-Series 'Koose Munisamy Veerappan' to Premiere on OTT Platform on December 8, பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  5. Koose Munisamy Veerappan trailer: Veerappan turns narrator of his own life's story, பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  6. This show on ZEE5 will teach you everything about Veerappan, பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  7. "ZEE5 announces Tamil docu-series Koose Munisamy Veerappan", cinemaexpress (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  8. "வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் 'கூச முனுசாமி வீரப்பன்' - வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ட்ரைலர்!", nakkheeran, பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  9. "Koose Munisamy Veerappan: Trailer Of Riveting Tamil Original Docu-Series Out Now", abplive (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 5 December 2023
  10. "ZEE5 Tamil Series Koose Munisamy Veerappan Postponed To New Date", binged (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 7 December 2023
  11. "Koose Munisamy Veerappan Documentary Review: A paisa-vasool crash course into the tale of the notorious anti-hero", CinemaExpress (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 17 December 2023
  12. "Koose Munisamy Veerappan web series review: This docu-series presents Veerappan's version of the story", SouthFirst (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 17 December 2023
  13. "Koose Munisamy Veerappan review", NTV Telugu (in தெலுங்கு), பார்க்கப்பட்ட நாள் 17 December 2023

வெளி இணைப்புகள்[தொகு]