குழு 13 ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழு 13 ஐதரைடுகள் (Group 13 hydrides) என்பவை தனிம வரிசை அட்டவணையின் 13 ஆவது தொகுதியில் ஐதரசன் பிணைப்புகளைக் கொண்ட இரசாயனச் சேர்மங்களைக் குறிக்கும். இக்குழுவின் உறுப்புகள்: போரான், அலுமினியம், காலியம், இண்டியம், தாலியம் ஆகியவையாகும்.[1]

மூவைதரைடுகள்[தொகு]

எளிமையான இந்த தொடரை XH3 என்ற வேதியியல் வாய்ப்பாடு அடையாளப்படுத்துகிறது. X ஆனது போரான் குடும்பத்தில் உள்ள ஏதேனும் ஒரு தனிமத்தைக் குறிக்கிறது.

சேர்மம் வேதியியல் வாய்ப்பாடு வடிவியல் மாதிரி
போரான் மூவைதரைடு
ஐதரசன் போரைடு
(போரேன்)
BH3
அலுமினியம் மூவைதரைடு
ஐதரசன் அலுமினைடு
(அலுமேன்)
(அலேன்)
AlH3
காலியம் மூவைதரைடு
ஐதரசன் காலைடு
(காலேன்)
GaH3
இண்டியம் மூவைதரைடு
ஐதரசன் இண்டிகைடு
(இண்டிகேன்)
InH3
தாலிய மூவைதரைடு
ஐதரசன் தாலைடு
(தாலேன்)
TlH3

பல்வேறு வகையான போரேன்கள் ஒரு பெரிய சகப் பிணைப்புத் தொகுதி வேதியியலைக் காட்டுகின்றன, ஆனால் கனமான குழு 13 ஐதரைடுகளில் இப்பண்பு இல்லை. இவற்றின் மூலக்கூற்று வாய்ப்பாடுகள் ஒருபுறமிருக்க இவை பலபடிகளை உருவாக்க முனைகின்றன. அலேன்(அலுமினியம் மூவைதரைடு) என்பது எண்முகமாக ஒருங்கிணைக்கப்பட்ட அலுமினிய அணுக்களைக் கொண்ட ஒரு வலுவான குறைக்கும் முகவராகும். காலேனை தயாரிப்பதற்கு கடினமாக உள்ளது. அறை வெப்பநிலையில் காலியம் மற்றும் ஐதரசனாக சிதைகிறது. இண்டிகேனும் தாலேனும் தயாரிக்கப்படவில்லை மற்றும் எந்த குறிப்பிடத்தக்க காலத்திற்கும் நிலைப்புத்தன்மை அற்றவையாகும்.[2]

எளிய MH3 குழு 13 ஐதரைடுகள் முக்கோண சமதள மூலக்கூறு வடிவவியலைக் கொண்டுள்ளன. sp2 கலப்பின மையம் மற்றும் காலியான p-ஆர்பிட்டால் ஆகியன இதற்கான காரணமாகும். நிக்டோசன் குழு ஐதரைடுகளின் முக்கோணப் பிரமிடு வடிவவியலுடன் இது முரண்படுகிறது.

அனைத்து குழு 13 ஐதரைடுகளும் BH4 மற்றும் AlH4 போன்ற ஐதரசன் எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளன.

அறு ஐதரைடுகள்[தொகு]

சேர்மம் வேதியியல் வாய்ப்பாடு வடிவியல் மாதிரி
டைபோரேன்
B2H6
Al2H6
டைகாலேன்
Ga2H6
டை இண்டிகேன்
In2H6
டைதாலேன்
Tl2H6

மேற்கோள்கள்[தொகு]

  1. Downs, Anthony J.; Pulham, Colin R. (1994-01-01). "The hydrides of aluminium, gallium, indium, and thallium: a re-evaluation" (in en). Chemical Society Reviews 23 (3): 175. doi:10.1039/cs9942300175. பன்னாட்டுத் தர தொடர் எண்:1460-4744. http://xlink.rsc.org/?DOI=cs9942300175. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 227–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழு_13_ஐதரைடு&oldid=3793283" இலிருந்து மீள்விக்கப்பட்டது