உள்ளடக்கத்துக்குச் செல்

குளிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளிகன் சிற்பம், மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் பிரகாரத்தில்

குளிகன்[1] என்பவர் இந்து சமய தொன்மவியலின் அடிப்படையில் குளிகை என்ற காலத்தின் அதிபதியாவார். இவர் சனீசுவரன் - தவ்வை தம்பதிளின் மகனாவார். இவரை மாந்தி[2] என்றும், மாந்தன் என்றும் அழைக்கின்றனர். எருமைத் தலையும் மனித உடலும் கொண்டவராக இருக்கிறார். பல்லவர்கள் காலத்தில் தவ்வையை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. அவர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட, புதிதாக கட்டப்பட்ட கோயில்களில் தவ்வை சிலையுடன் மாந்தனையும் வைத்து வழிபாடு செய்துள்ளனர். பெரும்பாலும் தன்னுடைய தாயான தவ்வை மற்றும் சகோதரி மாதி அவர்களுடன் ஒரே கல்லினால் ஆன சிலையில் உள்ளார். தற்போது இவரை வழிபடும் வழமை குறைந்து காணப்படுகிறது.



குளிகன் உதய நேரம்

[தொகு]

இராசி மண்டலத்தில் பூமிக்கு நேராகத் தினமும் பகல் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் குளிகன் தோன்றி மறைந்து விடுவான். இவன் ஒவ்வொரு நாளும் உதயம் நான்கு நாழிகை முன்னதாக வருவான்.

கிழமைகள் பகல் பொழுது உதயத்திற்கு மேல் (நாழிகை) இரவுப் பொழுது அஸ்தமனத்திற்கு மேல் (நாழிகை)
ஞாயிறு 26 நாழிகை 10 நாழிகை
திங்கள் 22 நாழிகை 6 நாழிகை
செவ்வாய் 18 நாழிகை 2 நாழிகை
புதன் 14 நாழிகை 26 நாழிகை
வியாழன் 10 நாழிகை 22 நாழிகை
வெள்ளி 6 நாழிகை 18 நாழிகை
சனி 2 நாழிகை 14 நாழிகை

குளிகனின் குணம்

[தொகு]

குளிகை காலத்தில் செய்யப்படுகிற காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையாகும். அதனால் நற்காரியங்களையும், சுபகாரியங்களையும் மட்டுமே இந்தக் காலத்தில் செய்கின்றார்கள்.


குளிகை காலம்

[தொகு]

குளிகனுக்கு உகந்த காலமான குளிகை காலத்தினை இந்து சமய சோதிடம் வரையறை செய்துள்ளது. இதன்படி பகல் மற்றும் இரவு என இருவேளைகளிலும் குளிகை காலம் வருகிறது.

கிழமைகள் பகல் பொழுது இரவுப் பொழுது
ஞாயிறு 03.00 - 04.30 09.00 - 10.30
திங்கள் 01.30 - 03.00 07.30 - 09.00
செவ்வாய் 12.00 - 01.30 06-00 - 07.30
புதன் 10.30 - 12.00 03.00 - 04.30
வியாழன் 09.00 - 10.30 01.30 - 03.00
வெள்ளி 07.30 - 09.00 12.00 - 01.30
சனி 06.00 - 07.30 10.30 - 12.00

குளிகன் வழிபாடு

[தொகு]

குளிகனை சனிக்கிழமைகளில் வணங்கலாம். சனீசுவரனை வணங்கும் போது குளிகனை சேர்த்து வணங்கலாம். [3]

காயத்திரி மந்திரம்

[தொகு]

மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத்

பீஜாட்சர மந்திரம்

[தொகு]

கும் குளிகாயநம

நவநாகம்

[தொகு]

குளிகன் என்பவர் நவநாகங்களில் ஒருவராவார். இவர் மாந்தி என்றும் அறியப்படுகிறார். இவர் காசிபர்-கத்ரு தம்பதியரின் ஒன்பது மகன்களில் ஒருவர்[4] என்றும், சனிபகவானுடைய மகன் [5]என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.


மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. https://web.archive.org/web/20160930180913/http://www.dinamalar.com/m/temple_detail.php?id=21476
  2. https://web.archive.org/web/20160930180913/http://www.dinamalar.com/m/temple_detail.php?id=21476
  3. https://web.archive.org/web/20160930180913/http://www.dinamalar.com/m/temple_detail.php?id=21476
  4. காசிபன் மனைவிய ரில்மிக்கான கத்துரு
    வயிற் றுதித்த கட்செவிகளைப்
    பேசிடில் பேரனந்தன் வாசுகி பிலத்த
    தக்கன் கார்கோடன் பற்பன்
    மகாபற்பன் சங்கு பாலன் குளிகன் இம்
    மாநாகம் எட்டுப் பேர்தானாதியிதில்
  5. http://www.ammandharsanam.com/magazine/March2012unicode/page002.php பரணிடப்பட்டது 2012-06-30 at the வந்தவழி இயந்திரம் சனி தோச நிவர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிகன்&oldid=3485816" இலிருந்து மீள்விக்கப்பட்டது