குறிப்பெயர் (மேலாண்மை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பெயர் (ஆங்கிலம்:Code name)அல்லது மறைப்பெயர் (ஆங்கிலம்:cryptonym) முறை என்பது ஒரு சொல் அல்லது பெயராகும். அந்த குறிப்பிட்ட சொல் அல்லது பெயரானது, பல நேரங்களில், முறைமுகமாக வேறொரு பெயரையோ, சொல்லையோ, ஒரு நபரையோ அல்லது திட்டப்பணியையோக் குறிக்கிறது. இக்குறிபெயரானது, அதிக அளவில் முதலில் இராணுவத்தில் இரகசியம் காக்க வேண்டியும், ஒற்றாடலுக்கும் பின்பற்றப் படுகிறது. நாளடைவில் வணிக நிறுவனங்களும், தங்களது திட்டப்பணிகளின் போட்டி நோக்கத்திற்காகவும், இரகசியம் காக்க வேண்டியும், சந்தைப்பெயரை முடிவு செய்யாத வணிகச் சூழ்நிலைகளிலும் பின்பற்றத் தொடங்கினர்.

இராணுக் குறிப்பெயர்கள்[தொகு]

'போர் அலுவலகம்', இலண்டன்
'பிளாக் ஏரோ'
(BLACK ARROW)
'புளூ வைக்சென்'
(Blue Vixen) உள்ள போர் விமானம்(Sea Harrier)
  • முதலாம் உலகப்போரில் நேசப்படைகளிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள, 'போர் அலுவலகம்' தொடங்கப்பட்டு, இக்குறிப்பெயர்களால் திறம்பட, போராணைகள் திறம்ப மேலாண்மைச் செய்யப்பட்ட.[1]
எடுத்துக்காட்டு: ஸ்டாலின் என்றால் 'இரும்பு மனிதன்' என்று பொருளாகும். அதற்குரிய குறிப்பெயராக 'கிலிப்டிக்'("GLYPTIC") குறிக்கப்பட்டது. அக்குறிப்பெயருக்கு,'கற்களைக் குடைந்து ஏற்படுத்தியத் தோற்றம்' என்று பொருள் கூறப்பட்டது.
  • இரண்டாம் உலகப்போரில்: குறிப்பெயர்கள் திறம்பட வளர்க்கப்பட்டு, தனித்தனிப் போர்படைப் பிரிவுகளில், ஒன்றுடன் ஒன்று கலவாமல், தனித்தனியே கையாளப்பட்டன. [2]
    • 'வானவில் குறிப்பெயர்கள்'-இம்முறை பெரும்பாலும் கைவிடப்பட்டாலும், இன்றும் வான்படைக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்பெயரில் முன்புறச் சொல் நிறத்தைக் கொண்டும், பின்புறப்பெயர் இலக்குப்பெயராகவும் அமைந்திருக்கும்.
(எ. கா.)'பிளாக் ஏரோ' (BLACK ARROW)[3], 'ப்ளூ வைக்சென்' (Blue Vixen) என்ற பெயரை உடைய விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும், 145 கி. கி. எடையுள்ள கதிரலைக் கும்பா.

வணிகக் குறிப்பெயர்கள்[தொகு]

  • மைக்ரோ சாஃப்டு நிறுவனமும் தனது வின்டோசு இயக்குதளங்களுக்கு, நகரங்களின் பெயர்களைத் திட்டப்பெயர்களாகப் பேணியது.
(எ. கா.) சிகாகோ (வின்டோசு 95), மெம்பிசு (வின்டோசு 98), வைசுட்டலர் (வின்டோசு எக்சுபி), வியன்னா (Blackcomb=வின்டோசு 7)[4]
(எ. கா.) பயர் பாக்சு பதிப்புகள் :2.0 (Bon Echo); 3.0: (Gran Paradiso); 3.5: (Shiretoko); 3.6: (Namoroka); 4.0: (Tumucumaque)

மேற்கோள்கள்[தொகு]

  1. WEBSTER, Graham (2013). ". History of the British Inter-Services Security Board and the Allocation of Code-Names in the Second World War". Intelligence and National Security [online].: 1–31. doi:10.1080/02684527.2013.846731. http://dx.doi.org/10.1080/02684527.2013.846731. 
  2. http://www.ibiblio.org/hyperwar/Glossary/index.html
  3. Gibson, Chris; Buttler, Tony (2007). British Secret Projects: Hypersonics, Ramjets & Missiles (2007 ). England: Midland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85780-258-6. https://archive.org/details/britishsecretpro0000gibs. 
  4. Lettice, John (October 24, 2001). "Gates confirms Windows Longhorn for 2003". The Register. பார்க்கப்பட்ட நாள் March 5, 2008.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிப்பெயர்_(மேலாண்மை)&oldid=3679834" இலிருந்து மீள்விக்கப்பட்டது