உள்ளடக்கத்துக்குச் செல்

குறளரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறளரசன்
பிறப்புடி. ஆர். குறளரசன்
பணி
  • நடிகர்
  • இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993 – தற்போது வரை

குறளரசன் (Kuralarasan) ஓர் இந்திய நடிகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் தனது தந்தை டி. ராஜேந்தர் மற்றும் தனது மூத்த சகோதரர் சிலம்பரசன் ஆகியோருடன் இன்றுவரை அவர்களது அனைத்து படங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

குறளரசன், டி. ராஜேந்தர் மற்றும் உஷா ஆகியோரின் இளைய மகனும், நடிகர் சிலம்பரசனின் தம்பியும் ஆவார்.

பிப்ரவரி 2019 இல், குறளரசனின் கலிமா (நம்பிக்கைப் பிரகடனம்) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தனது பெற்றோருடன் இசுலாத்தைத் தழுவிய காணொளி ஒன்று வெளியானது.[1][2] சிறு வயது முதலே குறளரசன் இசுலாத்தின் மீது பற்று கொண்டிருந்ததாகவும், அந்த பிரகடன நிகழ்வின் மூலம் இசுலாத்தை முழுமையாக தழுவியதாகவும் இவரது தந்தை டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.[3] குறளரசன் தனது சொந்த விருப்பத்தால் இசுலாத்தின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.[4]

தொழில்

[தொகு]

இவர் குழந்தைக் கலைஞராக தனது வாழ்க்கையைப் பெற்றெடுத்த பிள்ளை (1993) என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் சொன்னால் தான் காதலா (2001) படத்தில் இவரது பாத்திரத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார்.[5] இவர் தனது தந்தையின் தயாரிப்பான இது நம்ம ஆளு (2016) திரைப்படத்தின் மூலம் தனது சகோதரர் சிலம்பரசன் நடித்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். “கிங் காங்” என்ற பாடலை பாடியதோடு அல்லாமல், படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இவர் பாடல் வரிகளை எழுதினார்.[6][7][8][9][10][11] இவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கலைஞர்களுடன் ஒரு சுயாதீன இசைத் தொகுப்பிற்கு இசையமைத்தார். மேலும் பல இந்தித் திரைப்படங்களிலும் பணிபுரிகிறார்.[12][13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hussain, Shaik Zakeer (2019-02-17). "Tamil Actor Simbu's Brother Kuralarasan Converts To Islam" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  2. "Simbu's brother, third notable celebrity to embraces Islam" (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-19. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  3. ஹுசைன், எம் குணா,அலாவுதின் (16 February 2019). "இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்". Archived from the original on 22 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "ஆனந்தக் கண்ணீர் விட்ட சிம்பு! இஸ்லாத்துக்கு மாறியது என் விருப்பம் என குறளரசன் விளக்கம்!". Archived from the original on 22 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
  5. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz. Archived from the original on 22 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  6. "Kuralarasan debuted as a composer with Idhu Namma Aalu". The Hindu. Archived from the original on 22 April 2022. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  7. "Simbu to dance to brother's tunes?". The Times of India. Archived from the original on 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  8. "Pandiraj, Kuralarasan lash out at each other on social media". The Times of India. Archived from the original on 18 October 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  9. "Simbu, TR to sing in Kuralarasan's film". The Times of india. Archived from the original on 27 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  10. "Now Kuralarasan hits back with the karma angle | Tamil Movie News - Times of India". The Times of India. Archived from the original on 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
  11. "Simbu appreciates his brother's work". The Times of India. Archived from the original on 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  12. "Kuralarasan delays Idhu Namma Aalu teaser?". The Times of India. Archived from the original on 26 December 2021. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  13. "Now, Kuralarasan heads to Bollywood". The Times of India. Archived from the original on 9 September 2022. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறளரசன்&oldid=4173753" இலிருந்து மீள்விக்கப்பட்டது