குர்க்குமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்க்குமின் - கீட்டோ வடிவம்
குர்க்குமின் - ஈனால் வடிவம்

குர்க்குமின் (curcumin)என்பது மஞ்சளில் காணப்படும் முதன்மை மஞ்சளகம் (curcuminoid) ஆகும். மஞ்சளில் உள்ள மற்றவிரு மஞ்சளகங்கள் டீமெத்தாக்சிகுர்க்குமின், பைசுடீமெத்தாக்சிகுர்க்குமின் ஆகியன. மஞ்சளின் நிறத்திற்கு இவையே காரணமாகும்.

பண்புகள்[தொகு]

உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளாகத் தொழிற்பட்டு உயிர்வளியேற்றதை ஒடுக்குந்தன்மை (anti-oxidant), அழற்சி நீக்குந்தன்மை அல்லது அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory), தீநுண்மத்தை எதிர்க்குந்தன்மை (anti-viral), புற்றுநோய்க்கான வேதிச்சிகிச்சை (chemopreventive) ஆகிய குணங்கள் குர்க்குமினுக்கு உள்ளன என்றும் மனிதர்களுக்கு இது நச்சல்ல என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1][2]

பயன்கள்[தொகு]

மருத்துவப் பண்புகள் நிறைந்தவொரு வேதிப்பொருள் குர்க்குமின். எலும்பு மச்சைப் புற்றுநோய் (multiple myeloma), கணையப் புற்றுநோய் (pancreatic cancer), மையெலோடிசுபிலாசுடிக் சிண்டிரோம் (myelodysplastic syndrome) எனும் ஒருவகை இரத்தப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் (colon cancer), தடிப்புத் தோல் அழற்சி, ஆல்சைமர் நோய் (Alzheimer's disease) ஆகிய நோய்களுக்கு மருந்தாக இதனை மனிதர்களிடையே மருத்துவத் தேர்வு/ஆய்வுக்கு - human clinical trial - உட்படுத்தியுள்ளனர்.[3]

குறிப்புதவி[தொகு]

  1. [1] Phytochemicals.info
  2. [2] Curcumin: From ancient medicine to current clinical trials - Cellular and Molecular Life Sciences
  3. [3] Curcumin: From ancient medicine to current clinical trials - Cellular and Molecular Life Sciences
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்க்குமின்&oldid=2743648" இலிருந்து மீள்விக்கப்பட்டது