குமாவுன் கோட்டம்

ஆள்கூறுகள்: 29°36′N 79°42′E / 29.6°N 79.7°E / 29.6; 79.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டம் (ஆரஞ்சு நிறம்) மற்றும் கார்வால் கோட்டம் (மஞ்சள் நிறம்)

குமாவுன் கோட்டம் (Kumaon Division) இந்தி: कुमाऊं) வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் இரண்டு கோட்டங்களில் ஒன்றாகும். மற்றது கார்வால் கோட்டம் ஆகும். இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நைனிடால் நகரத்தில் உள்ளது. மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரத்தில் அமைந்துள்ளது. [1] குமாவுன் கோட்டத்தில் பெரும்பாலும் குமாவுனி மொழி பேசும் குமாவுனி மக்கள் வாழ்கின்றனர்.

மாவட்டங்கள்

குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. பித்தோரகர்
  2. பாகேஸ்வர்
  3. அல்மோரா
  4. சம்பாவத்
  5. நைனித்தால்
  6. உதம்சிங் நகர்

கோடைக்கால வாழிடங்கள்

குமாவன் கோட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கோடைக்கால வாழிடங்கள் நைனிடால் மற்றும் அல்மோரா நகரங்களாகும்.

புவியியல்

நைனிடால் ஏரி
அல்மோராவில் பாயும் கோசி ஆறு

இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்த குமாவுன் கோட்டத்தில் கோசி ஆறு மற்றும் சாரதா ஆறுகள் பாய்கிறது.

குமாவுன் கோட்டத்தின் வடக்கே திபெத், தெற்கே உத்தரப் பிரதேசம், கிழக்கே நேபாளம், மேற்கே கார்வால் கோட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

  • Upreti, Ganga Dutt (1894). Proverbs & folklore of Kumaun and Garhwal. Lodiana Mission Press.
  • Oakley, E Sherman (1905). Holy Himalaya; the religion, traditions, and scenery of Himalayan province (Kumaon and Garwhal). Oliphant Anderson & Ferrier, London.
  • of Kumaon, Raja Rudradeva (1910). Syanika sastra: or A Book on Hawking. Asiatic Society, Calcutta. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாவுன்_கோட்டம்&oldid=2431379" இலிருந்து மீள்விக்கப்பட்டது