குமாரராசு அட்சமாம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாரராசு அட்சமாம்பா
மக்களவை உறுப்பினர்
முன்னையவர்அரீந்திரராத் சட்டோபாத்யா
பின்னவர்கானூரி இலட்சுமண ராவ்
தொகுதிவிசயவாடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1906-09-06)6 செப்டம்பர் 1906
குண்டூர், இந்தியா
இறப்பு20 அக்டோபர் 1964(1964-10-20) (அகவை 58)
விசயவாடா, இந்தியா
துணைவர்வி. வெங்கட்ராம சாசுத்திரி
பிள்ளைகள்1 மகள்

குமாரராசு அட்சமாம்பா (Komarraju Atchamamba)(6 செப்டம்பர் 1906 - 20 அக்டோபர் 1964)   ஓர் இந்திய வழக்கறிஞர், மகப்பேறு மருத்துவர், மகளிர் மருத்துவ நிபுணர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இளமை[தொகு]

கொமர்ராஜு அட்சமாம்பா 1906 ஆம் ஆண்டு குண்டூரில் வரலாற்றாசிரியர் குமாரராசு வெங்கட லட்சுமண ராவின் மகளாகப் பிறந்தார். அட்சமாம்பா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1924-இல் காக்கிநாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் பெண் தொண்டர்களின் மாணவர் தலைவராக இருந்தார்.

அரசியல்[தொகு]

1928ஆம் ஆண்டில், சென்னை நகரில் சைமன் குழுவிற்கு எதிராக பெண் மாணவர்களின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின் தலைவராகவும் அட்சமாம்பா இருந்தார். 1943-1948 காலகட்டத்தில், இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அட்சமாம்பா 1948-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1957-இல், விஜயவாடாவிலிருந்து இந்திய தேசிய காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி 2வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கில் பிரசுதி - சிசு போஷனா என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். இது குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றிய பாரம்பரிய தவறான எண்ணங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. மகிளா என்ற பெண்களுக்கான இதழையும் வெளியிட்டார்.[1] இவர் 1940-இல் வி. வெங்கடராம சாசுத்திரியை மணந்தார். இந்த இணையருக்கு தான்யா என்ற மகள் பிறந்தார்.

இறப்பு[தொகு]

அட்சமாம்பா 20 அக்டோபர் 1964இல் இறந்தார்.[2] 2006இல், இவரது பிறந்த நூற்றாண்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Satyavathi, Kondaveeti (May 2009). "Hitha Suchani to Bhumika: Women's Magazines in Telugu". Sparrow Newsletter 61 (16–17): 3–4. http://www.sparrowonline.org/downloads/SNL17.pdf. பார்த்த நாள்: 15 October 2010. 
  2. "Tenth Session". Lok Sabha Debates 35 (1): 15. 16 November 1964. https://eparlib.nic.in/bitstream/123456789/2951/1/lsd_03_10_16-11-1964.pdf. 
  3. . 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரராசு_அட்சமாம்பா&oldid=3881813" இலிருந்து மீள்விக்கப்பட்டது