குதிரைமலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குதிரைமலை
Kudiramalai
குடியிருப்பு
நாடுஇலங்கை
மாகாணங்கள்வடமேல் மாகாணம்

குதிரைமலை (சிங்களம்: කුදිරමලෙයි, கிரேக்கம்: Hippuros, ஆங்கிலம்: Horse Mountain) என்பது கடலினுள் புகுந்திருக்கும் முனையும் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்த பண்டைய துறைமுக நகரமும் ஆகும். இது முன்பு யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர் நல்லூருக்கு நகரு முன் தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கியது. சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இது மன்னார் பண்டைய துறைமுக நகரம், வரலாற்று புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆகிய வரலாறுகளை பகிர்ந்து கொண்டுள்ளது. குதிரைமலை புத்தளம் மாவட்ட வடமுனையில் அமைந்து, பயனுள்ள மன்னார் தென் துறைமுகமாகவும், யாழ் தீபகற்ப மற்றும் வன்னி அரசுகளின் தென்முனை எல்லை நகரமாக பயன்பட்டது. இது திருகோணமலையிலிருந்து வன்னிக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் கரையிலிருந்து முத்தகழ்வு இடமும் பண்டைய கிராமமுமான வங்காலை 20 கி.மீ தூரத்தில் வடக்கில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைமலை_(இலங்கை)&oldid=1721637" இருந்து மீள்விக்கப்பட்டது