குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி
குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி | |
---|---|
![]() | |
தெலங்காணா அரசில் எரிசக்தி அமைச்சர் | |
பதவியில் 25 ஜூன் 2015 – பதவியில் | |
முன்னையவர் | சி. லக்சும ரெட்டி |
தெலங்காணா அரசில் எரிசக்தி அமைச்சர் | |
பதவியில் 2 ஜூன் 2014 – 25 ஜூன் 2015 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | கடியம் ஸ்ரீஹரி |
தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 June 2014 | |
முன்னையவர் | இராம்ரெட்டி தாமோதர் ரெட்டி |
தொகுதி | சூர்யபேட்டை சட்டப் பேரவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சூலை 1965 நாகரம், சூர்யபேட்டை மாவட்டம் |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
துணைவர் | சுனிதா |
பிள்ளைகள் | வேமன் ரெட்டி, இலகரி |
பெற்றோர் | இராமச்சந்திர ரெட்டி (தந்தை) சாவித்திரி (இறப்பு 2014) (தாயார்) |
வாழிடம் | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி (Guntakandla Jagadish Reddy) (பிறப்பு: ஜூலை 18, 1965), ஜிஜேஆர் என்ற தனது முதலெழுத்துக்களால் அடிக்கடி குறிப்பிடப்படும் இவர், ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். [1] தெலங்காணா அரசில் எரிசக்தி அமைச்சராக 2 ஜூன் 2014 முதல் பணியாற்றினார்.[2][3] இவர் சூர்யாபேட் தொகுதியில் இருந்து தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[4][5] பாரத் இராட்டிர சமிதி கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இந்தியாவின், தெலங்காணா மாநிலட்த்தில், சூர்யாபேட் டை மாவட்டம், அர்வப்பள்ளி மண்டலம், நாகரம் என்ற கிராமத்தில் இராமச்சந்திர ரெட்டி மற்றும் சாவித்திரிக்கு பிறந்தார். இவருக்கு நான்கு உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் 1985 இல் சூர்யாபேட்டை சிறீ வெங்கடேசுவரா கல்லூரியில் ( உசுமானியா பல்கலைக்கழகம் ) இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் விசயவாடாவில் உள்ள சித்தார்த்தா சட்டக் கல்லூரியில், ( நாகார்ஜுனா பல்கலைக்கழகம்) சட்ட இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தொழில்
[தொகு]நல்கொண்டா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவர் நல்கொண்டா மாவட்டத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் முதல் தலைவராகவும் இருந்தார்.
அரசியல்
[தொகு]இவர் 2001 இல் தெலங்காணா இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர், பாரத் இராட்டிர சமிதியின்ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். [6]
இவர் 2009 இல் உசூர்நகர் தொகுதியிலும், பின்னர் 2014 பொதுத் தேர்தலில் சூர்யாபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் சூர்யபேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission Of India" பரணிடப்பட்டது 18 மே 2014 at the வந்தவழி இயந்திரம். ECI.
- ↑ "Election Commission Of India" பரணிடப்பட்டது 18 மே 2014 at the வந்தவழி இயந்திரம். ECI.
- ↑ "Suryapet Assembly Election 2014". http://indianballot.com/andhra-pradesh-assembly-election-2014-location-34-4270.html.
- ↑ "KCR to Be Sworn in Telangana State's First CM on June 2". Deccan-Journal. Retrieved 2 June 2014.
- ↑ "Council of Ministers". telangana.gov.in. Archived from the original on 14 July 2014. Retrieved 14 July 2014.
- ↑ "Suryapet Assembly Election 2014" இம் மூலத்தில் இருந்து 11 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140711120210/http://indianballot.com/andhra-pradesh-assembly-election-2014-location-34-4270.html.