குஜராத் வன்முறை 2002

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குஜராத் படுகொலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குஜராத் வன்முறை 2002
நாள்27 பெப்ரவரி 2002 – மே 2002 (3 மாதங்கள்)
இடம்குஜராத், இந்தியா
22°46′N 73°36′E / 22.76°N 73.60°E / 22.76; 73.60ஆள்கூறுகள்: 22°46′N 73°36′E / 22.76°N 73.60°E / 22.76; 73.60
முரண்பட்ட தரப்பினர்
இந்துக்கள், குஜராத் அரசு
இஸ்லாமியர்கள்
வன்முறை மற்றும் அடிதடி
254[1]
790[1]
கோத்ரா is located in Gujarat
கோத்ரா
கோத்ரா
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆன்று நடந்த மதகலவரம் நடந்த இடங்களின் வரைப்படம்
வன்முறை சமயத்தில் அகமதபாத் நகரின் தோற்றம்

குஜராத் வன்முறை 2002 எனக் குறிப்பிடுவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே 2002-ஆம் ஆண்டில் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்த மதக்கலவரம் ஆகும். பெப்ரவரி 27, 2002 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கோத்ரா தொடர்வண்டி நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்[2]. இதில், அந்த தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர்[3].

பிப்ரவரி 27 - 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தை நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்!

டிசம்பர் 6, 1992 அன்று இந்து தீவிரவாதிகளால் இடிக்க பட்ட பாபர்மசூதி இருந்த இடத்தில் ராமர் ஆலயம் கட்டும் நோக்கத்தில் கரசேவைக்காக 1700 #விஷ்வ_இந்து_பரிஷத் என்கிற பாசிச இந்து இயக்கத்தின் இந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு சபர்மதி அதிவிரைவு தொடர்வண்டியில் சென்று விட்டு அகமதாபாத்க்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அன்று இரவு 8 மணியளவில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றபோது அந்த ரயிலின் 4 பெட்டிகளை சுற்றி காவிக் கும்பல் கூட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் நின்று கொண்டு #ஜெய்_ஸ்ரீ_ராம் கோஷமிட்டனர். அப்போதுதான் அந்த ரயிலின் #எஸ்5_ரயில்_பெட்டி தீ பிடித்து எரிந்து அடுத்தடுத்து கரசேவகர்கள் இருந்த 3 பெட்டிகள் எரிந்த போதும் அந்த இரயிலை சூழ்ந்து கொண்டிருத்த காவிக்கும்பல் தீயை அணைக்காமல், அதிகரிக்கவே வைத்தது. இதில் இரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதில் 14 குழந்தைகள், 27 பெண்கள் அடக்கம். இந்த படுகொலையால் இந்தியா மட்டுமல்ல  உலகமே  அதிர்ந்தது.

இந்த 'தீ'க்கு காரணம் இஸ்லாமியர்கள் என்று காவிகளால் வேக வேகமாக  குஜராத்துக்குள் அவதூறுகளை பரப்ப மோடி அரசு மீடியாக்கள் அரசு இயந்திரங்கள் துன்டப்பட்டது.

மோடியின் அரசு உத்தரவின் பேரில் குஜராத் காவல்துறை அறிந்தும் அவர்களின் கண்களை மூடிக்கொண்டதாகவே தெரிகிறது!

காவிகளின் வன்முறை வெறியாட்டம் கோத்ராவில் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியது தொடர்ந்து நடந்த கலவரங்களில் #ஆர்எஸ்எஸ் #விஸ்வஇந்துபரிஷத் #பாஜக வகையறாக்கள் முஸ்லிம்களை எரித்தனர் கொலை செய்தனர் முஸ்லிம் பெண்கள் கற்பழித்தார், சொத்துக்களை கொள்ளையடித்தனர், சேதப்படுத்தினர், கற்பத்தில் இருந்த குழந்தையைகூட தாயின் வயிறை வெட்டி எடுத்து தாயையும் குழந்தையையும் நெருப்பில் எரித்தனர் இப்படிப்பட்ட மிருகங்கள் கூட செய்ய முடியாத கொடூரங்களை செய்த காவி தீவிரவாதிகளை #தெகல்கா, #அவுட்லுக், #டைம்ஸ்ஆப்இந்தியா #பிபிசி #அல்ஜஜீரா போன்ற ஊடகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டன!

2005ல் மத்திய அரசால் நியமிக்கப்பட் விசாரணைக் கமிஷன், ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்றும், ஒரு ரயில் பெட்டியில் சமையல் செய்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதல் காரணமாக நடக்கவில்லை என்றும் கூறியது.

நானாவதி கமிஷனின் அறிக்கையின் முதல் பகுதி செப்டம்பர் 25, 2009 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குழு இறுதி அறிக்கையை 2014 நவம்பர் 18 அன்று அப்போதைய முதலமைச்சர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது, ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது!

பின் அதன் அறிக்கை 2019ல் மோடியின் ஆட்சியில் 17 வருடங்களுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட #நானாவதிகமிஷன் மோடி #பரிசுத்தமானவர் என்றும் கலவரத்துக்கு மதமோ அரசியலோ காரணம் இல்லை என்று #இரத்தகாட்டேரி #காவிகளுக்கு #பரிசுத்த_காவி பட்டமும் அளித்து குற்றமற்றவர்கள் என்ற நீதிமன்றம் கலவரத்தில் மாநில அரசுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டிய மூன்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரின் நம்பகத்தன்மையையும் ஆணையம் கேள்வி எழுப்பியது. ஆதாரங்களை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர், காவல்துறையின் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இருந்ததாகக் கூற முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்தியாவில் நீதி புதைக்கப்பட்டுவிட்டது

#abuZakariyya

#S5_couch #SabarmadiExpress #InTheNameOfRam #BjpKillings #RSSKillings #RSSMurders #BJPMurders #VHP #GujaratKillings #RamKillings

கோத்ரா தொடருந்து எரிப்பு[தொகு]

27 பெப்ரவரி 2002[தொகு]

2002-ஆம் ஆண்டு 27 பெப்ரவரி அன்று, அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கூட்டம் ஒன்று தீ வைத்ததாக நம்பப்பட்டது. இதில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்[3]. எரிந்த தொடர்வண்டிப் பெட்டிகளை கழற்றி விட்ட பின்னர், தொடர்வண்டி வடோடராவிற்கு சென்றடைந்தது. அங்கு கூடியிருந்தோர் ,தொடர்வண்டியில் வந்திறங்கிய ஒருவரை கொன்றுவிட்டு, மற்றவர்களை கட்டையால் அடித்தனர்[3]. அன்றே,அகமதாபாத்தில் இரண்டு பேருந்துகளுக்கு, ஒரு கும்பல் தீயிட்டது[4].

ஆஸ்திரேலியாவில் இருந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்[3]. நாட்டு மக்கள் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டி கொண்டார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை, ராமர் கோவில் கட்டுவதை தவிர்க்குமாறு வாஜ்பாய் மற்றும் அத்வானி வலியுறுத்தினர்[5].எனினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணியை 15 மார்ச் அன்று தொடங்கப்போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது[6]. இதற்காக 3000 உதவி ராணுவ அணிகள் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர்[3].

70,000 காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாநிலமெங்கும் அமர்த்தப்பட்டனர்[7] அன்று இரவே, கோத்ரா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது[3].குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் கோர்தன் சடாஃபியா வன்முறையை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தார். இதில் கண்டவுடன் சுட உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இடங்களில் அமல்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார். மற்றும், இந்து - முஸ்லிம்கள் ஒன்றாக வாழும் இடங்களுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டது[3]. கடைகளைச் சூறையாடிய மற்றும் வீடுகளை தீயிட்டு கொளுத்திய கும்பலின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது வாலிபர் மரணமடைந்தார்[3]

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடர்வண்டி எரிப்பு நிகழ்வை கண்டித்தார்[8]. இவரைத் தவிர, வேறெவரும் அந்நிகழ்வை கண்டிக்கவில்லை[9]. குஜராத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்திலும் எச்சரிக்கை எழுப்பப்பட்டது[10].

28 பெப்ரவரி 2002[தொகு]

தொடர்வண்டி எரிப்பைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் கடையடைப்புக்குக் கோரினர்[6]. குஜராத்தின் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன[5]. பாராளுமன்றத்தில் நடந்த அறிக்கைத் தாக்கலை பாஜக மற்றும் சிவ சேனா புறக்கணித்து அமளியில் ஈடுப்பட்டனர்[11]. தொடர்வண்டி எரிப்புக்காக பன்னிரெண்டு பேரை கைது செய்தனர். ஆயிரம் பேர் கொண்ட துணை ராணுவப் படையை இந்திய அரசு குஜராத்திற்கு அனுப்பிவைத்தது[12]. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. 60 முஸ்லிம்களை இந்து வன்முறைக் கும்பல் கொன்றதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன[12]. கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஆறு பேரை காவல்த்துறையினர் சுட்டுக் கொன்றனர்[12].

முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதம மந்திரியை சந்தித்து கலவரத்தை கட்டுப்படுத்த கோரினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி[8]. வீ ஹெச்பி தொண்டர்களை அயோத்திக்கு செல்ல வலியுறித்தியும், கோவில் கட்ட வழி வகுக்காத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் மேல குற்றச்சாட்டு எழுப்பியும், பிரதமரை இராஜினாமா செய்யக் கூறினார் ஓம்கார் பாவே எனும் வீஹெச்பி தலைவர் அறிக்கை வெளியிட்டார்[12].

பாதிப்புகள்[தொகு]

இந்திய மத்திய அரசின் தகவலின்படி இக்கொடிய வன்முறையின் நிமித்தம் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டும், 2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போனதோடு மேலும் 919 பெண்கள் விதவைகளாகவும் 606 சிறார்கள் அனாதைகளும் ஆக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பற்ற மனித உரிமை கண்காணிப்பாளர்களின தரவுகளின்படி வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 1000 ற்கும் அதிகமென கூறப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் Congress Research Service (CRS) தகவலின் படி இவ்வெண்ணிக்கை 3000 க்கும் அதிகமெனவும் இவற்றில் அதிகமானோர் முஸ்லிம்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்திய நடுவண் அரசு இவற்றையெல்லாம் மறுத்தது. வன்முறையில் வீடுகள், கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டதுடன், நபர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டும், பெண்கள் கூட்டாக வன்புணர்ச்சிக்கும் உள்ளானார்கள்.

குற்றவியல் வழக்குகள்[தொகு]

பில்கிஸ் பானு வழக்கு[தொகு]

குஜராத் வன்முறையின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேர் மார்ச் 3-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிகழ்வு தொடரபான வழக்குகளே பில்கிஸ் பானு வழக்கு என்று அழைக்கப்படுகின்றன.[13]

பின் விளைவுகள்[தொகு]

 1. ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் வன்முறை குறித்தான தகவல்கள் வெளியாகின. அதில், ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும், இவைகளுடன் சிறுபான்மை பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக்காரர்களுக்கும், அகமதாபாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கும் மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.[14][15][16].
 2. ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் கலவரக்காரர்கள் முஸ்லிம்களை எவ்வாறு திட்டமிட்டு இன அழிப்பு செய்தார்கள் என்று தன் வாயாலேயே வீடியோ வாக்குமூலம் கொடுத்தது நாடு முழுவதும் பரபரப்புக்கு உள்ளாகியது. அந்த ரகசிய புலன்விசாரணை வாக்குமூலங்கள் நாடு முழுவதிலும் உலக அரங்கிலும் பாரதிய ஜனதா மற்றும் அதன் பரிவார இயக்கங்களான வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் & சிவசேனாவுக்கு அவப்பெயரை தேடித்தந்தது..[14][15][16]. உச்ச நீதிமன்றம் இதை ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துகொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Gujarat riot death toll revealed". BBC. 11 May 2005. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4536199.stm. 
 2. http://www.pbs.org/newshour/updates/february02/india_2-27.html INDIAN TRAIN TORCHED, AT LEAST 57 DEAD, PBS, February 27, 2002
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 http://news.google.com/newspapers?id=0H5dAAAAIBAJ&sjid=n1wNAAAAIBAJ&pg=6503,5458120&dq=godhra&hl=en Telegraph Herald – International section – February 27, 2002
 4. http://news.google.com/newspapers?id=IrcaAAAAIBAJ&sjid=0D4EAAAAIBAJ&pg=6667,5565927&dq=godhra&hl=en Milwaukee Journal Sentinel – February 28, 2002 – Muslim mob burns trains, killing 57 Hindus
 5. 5.0 5.1 http://www.nytimes.com/2002/02/28/world/fire-started-on-train-carrying-hindu-activists-kills-58.html Fire Started on Train Carrying Hindu Activists Kills 58
 6. 6.0 6.1 http://www.theguardian.com/world/2002/feb/28/india.lukeharding Fire attack on train shakes India
 7. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/1386341/Hindus-massacred-on-blazing-train.html
 8. 8.0 8.1 http://hindu.com/thehindu/2002/03/01/stories/2002030106081100.htm
 9. http://books.google.co.in/books?id=WZQip6zwxYwC&printsec=frontcover&dq=editions:ynFpCyHNIfsC&hl=en&sa=X&ei=1W4QUsMGitGtB5aJgZAD&ved=0CC0Q6AEwAA#v=onepage&q&f=false Godhra: The Missing Rage, S.K.Modi, Page 27
 10. http://www.hindu.com/thehindu/2002/02/28/stories/2002022803201100.htm
 11. http://www.mid-day.com/news/2002/feb/21259.htm Sinha presents tough Budget
 12. 12.0 12.1 12.2 12.3 http://www.nytimes.com/2002/03/01/world/hindu-rioters-kill-60-muslims-in-india.html Hindu Rioters Kill 60 Muslims in India, The New York Times, March 1, 2002
 13. "What is Bilkis Bano gangrape case?". Indian Express. பார்த்த நாள் 6 மே 2017.
 14. 14.0 14.1 http://archive.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp
 15. 15.0 15.1 http://archive.tehelka.com/story_main35.asp?filename=Ne031107spycam_videos1.asp
 16. 16.0 16.1 http://www.kalachuvadu.com/issue-96/page24.asp

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_வன்முறை_2002&oldid=2926680" இருந்து மீள்விக்கப்பட்டது