குசாரி மகால் தொல்பொருள் அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 26°14′02″N 78°10′12″E / 26.234°N 78.170°E / 26.234; 78.170
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசாரி மகால் கோட்டை.
குசாரி மகால் கோட்டை

குசாரி மகால் தொல்பொருள் அருங்காட்சியகம் (Gujari Mahal Archaeological Museum) இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அமைந்துள்ள ஓர் அரசு அருங்காட்சியகமாகும். மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் என்றும் சில நேரங்களில் குவாலியர் கோட்டை அருங்காட்சியகம் என்றும் இது அழைக்கப்படுகிறது. குவாலியர் நகரத்திலுள்ள குசாரி மகால் கோட்டையில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. [1] விதிசா நகரத்தின் ஏலியோதோரசு தூணின் கருட வாகனத்தின் ஒரு பகுதி உட்பட பிராந்தியத்தின் பல கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [2]

குசாரி மகாலின் அரண்மனை தோமர் ராசபுதன ஆட்சியாளர் மான் சிங் தோமர் என்பவரால் அவரது துணைவியான மிருக்னயனிக்காக கட்டப்பட்டது. இவர் குசர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இந்த அரண்மனையே தொல்பொருள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. கிமு 1 மற்றும் கி.மு 2 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்து மற்றும் சமண சிற்பங்கள், சலபஞ்சிகாவின் சிறிய சிலை, சுட்டுமண் பாண்டப் பொருட்கள் மற்றும் பாக் குகைகளில் காணப்படும் ஓவியங்களின் பிரதிகள் ஆகியவை அருங்காட்சியகத்தில் உள்ள அரிய கலைப்பொருட்களில் சிவவாகும்.

குசாரி மகால் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Official website for tourism in the Madhya-Pradesh region". Archived from the original on 2019-02-20. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
  2. Buddhist Landscapes in Central India: Sanchi Hill and Archaeologies of Religious and Social Change, C. Third Century BC to Fifth Century AD, Julia Shaw, Left Coast Press, 2013, p.89