உள்ளடக்கத்துக்குச் செல்

கீதா பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா பாலி
பிறப்புஹரிகிர்டன் கௌர்
1930[1]
அமிர்தசரஸ், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு21 சனவரி 1965(1965-01-21) (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–34–35) [2]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1950-1964
வாழ்க்கைத்
துணை
சம்மி கபூர் (1955)
பிள்ளைகள்ஆதித்ய ராஜ்கபூருடன் சேர்த்து இருவர்

கீதா பாலி (Geeta Bali) (1930 ‒ 21 ஜனவரி 1965) பாலிவுட்டின் பிரபலமான திரைப்பட நடிகையாவார். பாலிவுட் நட்சத்திரங்களில் மிகவும் தன்னிச்சையான மற்றும் வெளிப்படையான நடிப்புக்காக இவர் பாராட்டப்பட்டார்.[2]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

கீதா பாலி, இந்தியா பிரிவதற்கு முன்பிருந்த பஞ்சாபில் அமிர்தசரசு என்ற இடத்தில் ஹரிகிர்டன் கௌர் என்ற பெயருடன் 1930இல் பிறந்தார்.[1] திரைப்படங்களில் நுழைந்து வெற்றி பெற்ற பிறகு இவரது குடும்பம் மும்பை சென்றது.

தொழில்

[தொகு]

கீதா பாலி, தனது 12 வயதில், 'தி காப்லெர்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமான தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 'பத்னாமி' (1946) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.[3] இவர், 1950களில் நட்சத்திரமாக ஆனார். ராஜ் கபூருடன் "பாவ்ரேநாய்ன்" (1950), பிரித்விராஜ் கபூருடன் ஆனந்த மடம் போன்ற படங்களில் தோன்ற ஆரம்பித்தார். கபூர் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட பிறகு மற்ற நடிகைகளைப் போலல்லாது, பாலி தனது மரணத்திற்கு முன்னர் வரை நடித்துக்கொண்டிருந்தார். இவரது கடைசி படம் "ஜப் சீ தும்கோ தேகா ஹாய்" 1963 ஆம் ஆண்டில் வெளிவந்தது. தனது 10 வருட திரை வாழ்க்கையில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் நடித்துள்ளார். சுரிந்தர் கபூர் தயாரிப்பாளராக பாலி உதவினார்.[4][5]

சொந்த வாழ்க்கை

[தொகு]

1947க்கு முன்னர் இவரது குடும்பம் அமிருதசரசுவில் வாழ்ந்தது. இவருடைய தந்தை கர்தார் சிங் ஒரு தத்துவவாதியாக அறியப்பட்டார். இவர் ஒரு சீக்கிய அறிஞர். மேலும், சீக்கிய கீர்த்தனைகளை பாடுபவர். இவரது தாய்வழி தாத்தா, தாகத் சிங் (1870-1937), "சீக்கிய கன்யா மஹாவித்யாலே" என்ற பெண்கள் பள்ளியை பெரோஸ்பூரில் 1904இல் நிறுவினார். இவரது மூத்த சகோதரன் திக்விஜய் சிங் பாலி ஒரு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 1952ஆம் ஆண்டில் அசோக் குமார் நடித்த "ராக் ரங்" என்ற திரைப்படத்தில் நடிக்க பாரம்பரிய இசை, நடனம், குதிரைச் சவாரி, வாள் சண்டை ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். அடிப்படைவாத சீக்கியர்கள், இவர் திரைப்படங்களில் நடிப்பதை விரும்பாததால் இவர்களின் குடும்பத்தை தங்கள் சமூகத்திலிருந்து புறக்கணித்தனர். (ஆதாரம்: அமர் பார்தி அம்ரிதா ப்ரிதம், டிசம்பர் 1982 'நாகமணி' பேட்டி)

1955 ஆகஸ்ட் 23 அன்று கீதா "காபி ஹவுஸ்" படத்தில் தன்னுடன் நடித்த சம்மி கபூரை மணந்தார்.[6] இவர்களுக்கு ஆதித்யா ராஜ் கபூர் என்ற மகனும், காஞ்சனா என்ற மகளும் உண்டு.[2] ராஜீந்திர் சிங் பேடி இயக்கத்தில் "எய்க் சதர் மெய்லி சி" என்ற புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட "ரனோ" என்ற படத்தில் நடித்துவரும் போது 21 ஜனவரி 1965, பெரியம்மை நோயினால் காலமானார். திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ள பேடி, பாலி அந்த திட்டத்தை கைவிட்டார். 'எகத் சாடர் மெய்லி ஸி', என்ற திரைப்படத்தை இவரது இறுதி நெருப்பில் எரித்து விட்டதாக பின்னர் எழுதினார்.

"வாச்சன்" (1955) படத்திற்கான சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டர். "கவி"(1955) திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார். ஆனந்த மடம் இவரது மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Adrian Room (26 July 2010). Dictionary of Pseudonyms: 13,000 Assumed Names and Their Origins. McFarland. pp. 44–. ISBN 978-0-7864-4373-4. Retrieved 22 April 2012.
  2. 2.0 2.1 2.2 Dinesh Raheja. "Geeta Bali: That Amazing Vivaciousness". ரெடிப்.காம். Retrieved 9 May 2018.
  3. Subodh Kapoor (2002). The Indian Encyclopaedia: Gautami Ganga -Himmat Bahadur. Cosmo Publications. pp. 2575–. ISBN 978-81-7755-266-9. Retrieved 22 April 2012.
  4. "'Sonam Kapoor is a better actor than Anil'". ரெடிப்.காம். Retrieved 9 May 2018.
  5. Pandya, Sonal. "10 things you didn't know about Geeta Bali". Cinestaan. Retrieved 2018-06-30.
  6. Ramesh Dawar (1 January 2006). Bollywood Yesterday-Today-Tomorrow. Star Publications. pp. 1–. ISBN 978-1-905863-01-3. Retrieved 22 April 2012.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_பாலி&oldid=4162119" இலிருந்து மீள்விக்கப்பட்டது