ஆனந்த மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனந்த மடம் 1953 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் திரைப்படமாகும். ஆனந்த் மத் என்ற தலைப்பில் 1952 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம் தமிழ்மொழிக்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.[1] ஹேமன் குப்தா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பிரிதிவிராஜ்கபூர், கீதா பாலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வங்க மொழி எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்த மத் என்ற புதினத்தைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.

ஹேமந்த் குமார் இசையமைத்த இத்திரைப்படத்தில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180624002838/http://www.lakshmansruthi.com/cineprofiles/1953.asp. பார்த்த நாள்: 2022-04-10. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_மடம்&oldid=3719305" இலிருந்து மீள்விக்கப்பட்டது