கீதா சூட்சி
கீதா சூட்சி (GeetaZutshi) (பிறப்பு: டிசம்பர் 2, 1956) ஒரு முன்னாள் இந்திய தடகள விளையாட்டு வீராங்கனையாவார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் நாள் இவர் பிறந்தார்.800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் பல தேசிய மற்றும் ஆசிய சாதனைகளை சூட்சி நிகழ்த்தியுள்ளார்.
1982 ஆம் ஆண்டு 800 மீ ஓட்டத்திலும், 1978 மற்றும் 1982ஆம் ஆண்டுகள் இரண்டிலும் 1500 மீ பெண்கள் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை சூட்சி வென்றார்.[1] 1982 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த இந்திய பெண் தடகள வீரராக தொடக்க விழாவின் போது போட்டியாளர்களின் சார்பாக இவர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சூட்சியின் சாதனைகளுக்காக இவருக்கு அர்ச்சுனா விருதும், பத்ம சிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளன.
எவரெசுட்டு சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பால் போன்ற பிற இந்தியப் பெண்களுக்கு சூட்சி ஊக்கம் அளித்துள்ளார். குழந்தையாக இருந்தபோது பிரதமர் இந்திரா காந்தியுடன் சூட்சி இருக்கும் செய்தித்தாள் புகைப்படத்தைப் பார்த்தபின் பால் தேசிய புகழ் பெறத் தொடங்கினார்.[2]
சூட்சிக்கு தடகள வீர்ர் முகமது இலியாசு பாபர் பயிற்சியளித்தார். அமெரிக்காவிலிருந்து 17 ஆண்டுகள் கழித்து 2002 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இந்தியா திரும்பிய சூட்சி இந்திய இளையோர் தடகள அணியின் (800 மீ மற்றும் 1500 மீ) பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]ஆண்டு | போட்டி | இடம் | நிலை | குறிப்புகள் |
---|---|---|---|---|
1978 | ஆசிய விளையாட்டுகள் | பேங்காக், தாய்லாந்து | 1ஆவது | 800 மீ |
2ஆவது | 1500 மீ | |||
1981 | ஆசிய சாம்பியன் பட்டம் | தோக்கியோ, யப்பான் | 1ஆவது | 800 மீ |
2nd | 1500 மீ | |||
1982 | ஆசிய விளையாட்டுகள் | புது தில்லி, இந்தியா | 2nd | 800 மீ |
2nd | 1500 மீ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Asian Games. GBR Athletics. Retrieved on 2015-02-08.
- ↑ "Archived copy". Archived from the original on 2005-02-04. பார்க்கப்பட்ட நாள் 2005-02-16.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
புற இணைப்புகள்
[தொகு]- "GeetaZutshi". Sports-Reference.com. Sports Reference LLC. பரணிடப்பட்டது 2012-10-17 at the வந்தவழி இயந்திரம்
- The Telegraph (India) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்