கி. துரைராஜசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி. துரைராஜசிங்கம்
நா.உ மா.ச.உ
கிழக்கு மாகாண சபை விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 மார்ச் 2015
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–2000
மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2012
தனிநபர் தகவல்
பிறப்பு 28 சூலை 1956 (1956-07-28) (அகவை 67)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் மட்டக்களப்பு
தொழில் வழக்கறிஞர்
சமயம் இந்து

கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் ('Krishnapillai Thurairajasingam, பிறப்பு: 28 சூலை 1956)[1] இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

வழக்கறிஞராகப் பணி புரியும் துரைராஜசிங்கம்[2][3] 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] பின்னர் 2012 மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பீட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7][8]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து 2014 செப்டம்பரில் கட்சியின் பொதுச் செயலாளராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார்.[9][10] 2015 அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிறுபான்மைக் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்ததை அடுத்து, அங்கு புதிய அர்சு பதவியேற்றது.[11][12][13] துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தின் விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் 2015 மார்ச் 3 இல் பதவியேற்றார்.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Directory of Past Members: Thurairasasingham, Krishnapillai". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2963. 
 2. Krishnaswamy, P. (16 செப் 2012). "Post elections assurances: Focus on development". சண்டே ஒப்சேர்வர் இம் மூலத்தில் இருந்து 2012-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120922041219/http://www.sundayobserver.lk/2012/09/16/pol07.asp. 
 3. டி. பி. எஸ். ஜெயராஜ் (7 மார்ச் 2015). "Imperative Need to Support Tamil Moderates in the Struggle Against Extremists". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/65673/imperative-need-to-support-tamil-moderates-in-the-struggle-against-extremists. 
 4. "Result of Parliamentary General Election 1994". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1994%20GENERAL%20ELECTION-SM01.PDF. 
 5. "Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/ele_2012/Candidates/Batticaloa%20preference.pdf. 
 6. "Eastern Province Chief Minister assumes duties". சண்டே டைம்சு. 30 செப்டம்பர் 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html. 
 7. Kelum Bandara; Kelum Bandara (18 சூலை 2012). "Two TNA candidates withdraw due to threats". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/news/20395-two-tna-candidates-withdraw-due-to-threats.html. 
 8. "TNA Batti candidate locked inside house". சிலோன் டுடே. 19 சூலை 2012 இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402121727/http://www.ceylontoday.lk/16-9837-news-detail-tna-batti-candidate-locked-inside-house.html. 
 9. "Mavai replaces Sampanthan as ITAK leader". தமிழ் கார்டியன். 6 செப்டம்பர் 2014. http://tamilguardian.com/article.asp?articleid=12123. 
 10. "Changes In ITAK Top Posts". Asian Mirror. 7 செப்டம்பர் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141223020133/http://www.asianmirror.lk/news/item/3299-changes-in-itak-top-posts/3299-changes-in-itak-top-posts. 
 11. Somarathna, Rasika (5 மார்ச் 2015). "'EPC power sharing similar to experimental unity govt'". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402123328/http://www.dailynews.lk/?q=local%2Fepc-power-sharing-similar-experimental-unity-govt. 
 12. Balachandran, P. K. (17 பெப்ரவரி 2015). "For The First Time in History, TNA Will Be in Eastern Province’ Board of Ministers". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/For-The-First-Time-in-History-TNA-Will-Be-in-Eastern-Province%E2%80%99-Board-of-Ministers/2015/02/17/article2673341.ece. 
 13. Thambiah, Mirudhula (24 பெப் 2015). "SLMC - TNA marriage in the East". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227103624/http://www.ceylontoday.lk/89-85616-news-detail-slmc-tna-marriage-in-the-east.html. 
 14. Panchalingam, Ariram (3 மார்ச் 2015). "New Eastern Provincial Council Ministers sworn in". நியூஸ் ஃபர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2017-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170613230617/http://newsfirst.lk/english/2015/03/just-in-new-eastern-provincial-ministers-sworn-in/81189. 
 15. "Eastern PC Ministers sworn in". Hiru News. 3 மார்ச் 2015. http://www.hirunews.lk/104692/eastern-pc-ministers-sworn-in. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._துரைராஜசிங்கம்&oldid=3549546" இருந்து மீள்விக்கப்பட்டது