கிளிசே 809

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gliese 809
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cepheus
வல எழுச்சிக் கோணம் 20h 53m 19.79051s[1]
நடுவரை விலக்கம் +62° 09′ 15.8028″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.54[2]
இயல்புகள்
விண்மீன் வகைM2V[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−17.30±0.09[3] கிமீ/செ
Proper motion (μ) RA: 1.56[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −774.55[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)142.0543 ± 0.0160[4] மிஆசெ
தூரம்22.960 ± 0.003 ஒஆ
(7.0396 ± 0.0008 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)9.31[5]
விவரங்கள்
திணிவு0.614[2] M
ஆரம்0.705±0.023[6] R
வெப்பநிலை3,597[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)2.8[2] கிமீ/செ
வேறு பெயர்கள்
BD+61° 2068, GJ 809, HD 199305, HIP 103096[7]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
ARICNSdata

கிளிசே 809 (Gliese 809)என்பது செபியசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு செங்குறுமீன் ஆகும் , இது பல விண்மீன் அமைப்பின் முதன்மை உறுப்பாகும். 8.55 என்ற பருமையுடன், வெறும் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது. இது அருகிலுள்ள விண்மீன்களின் கிளிசே பட்டியலின் ஒரு பகுதியாகும் , இது சூரிய மண்டலத்திலிருந்து சுமார் 23 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. கிளிசே 809 சூரியனின் ஆரத்தில் 70.5% ஆகவும் , சூரியனின் பொருண்மையில் 61.4% ஆகவும் உள்ளது. இது - 0.06% உலோகத்தன்மை கொண்டது , அதாவது நீரகம், எல்லியம் தவிர மற்ற தனிமங்களின் செறிவு சூரியனைப் போல 87.1% மட்டுமே.

ஒரு உயர் சரியான இயக்க விண்மீனாகும். இது பின்னணி விண்மீன்களுடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு 0.77 ஆர்க் நொடிகள் நகர்கிறது. இயற்பியலாக இது சூரிய மண்டலத்துடன் ஒப்பிடுகையில் நொடிக்கு 31.1 கிமீ என்ற விண்வெளி வேகத்தில் பயணிக்கிறது.  இந்த நட்சத்திரத்தின் விண்மீன் மண்டல வட்டணை அதன் விளிம்பில் உள்ள விண்மீன மண்டல மையத்திலிருந்து 21,300 ஒளியாண்டு முதல் அதன் உச்சியில் 30,600 ஒளியாண்டு வரை கொண்டு செல்கிறது.  வட்டணை மையப்பிறழ்வு 17.8% ஆகும் , அரைப் பேரச்சு 25,956 ஒளியாண்டுகளும் மற்றும் அரைச் சிற்றச்சு 25,542 ஒளியாண்டுகளும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 van Leeuwen, F. (2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, doi:10.1051/0004-6361:20078357, S2CID 18759600.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Jenkins, J. S.; Ramsey, L. W.; Jones, H. R. A.; Pavlenko, Y.; Gallardo, J.; Barnes, J. R.; Pinfield, D. J. (October 2009), "Rotational Velocities for M Dwarfs", The Astrophysical Journal, 704 (2): 975–988, arXiv:0908.4092, Bibcode:2009ApJ...704..975J, doi:10.1088/0004-637X/704/2/975, S2CID 119203469.
  3. Nidever, David L.; et al. (August 2002), "Radial Velocities for 889 Late-Type Stars", The Astrophysical Journal Supplement Series, 141 (2): 503–522, arXiv:astro-ph/0112477, Bibcode:2002ApJS..141..503N, doi:10.1086/340570, S2CID 51814894.
  4. Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  5. "Gliese 809 (HIP 103096)". Ashland Astronomy Studio. பார்க்கப்பட்ட நாள் 28 March 2014.
  6. Houdebine, E. R. (September 2010), "Observation and modelling of main-sequence star chromospheres - XIV. Rotation of dM1 stars", Monthly Notices of the Royal Astronomical Society, 407 (3): 1657–1673, Bibcode:2010MNRAS.407.1657H, doi:10.1111/j.1365-2966.2010.16827.x.
  7. "GJ 809". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2015-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_809&oldid=3820387" இலிருந்து மீள்விக்கப்பட்டது