கிறிஸ் பென்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ் பென்வா
2006இல் பென்வா
இயற்பெயர்கிறிஸ்டோபர் மைக்கேல் பென்வா
பிறப்பு(1967-05-21)மே 21, 1967
மொண்ட்ரியால், கியூபெக், கனடா
இறப்புசூன் 24, 2007(2007-06-24) (அகவை 40)
Fayetteville, Georgia, U.S.
துணை
 • மார்ட்டினா பென்வா
  (தி. 1988; மண முறிவு 1997)
 • {
  நான்சி பென்வா
  (தி. 2000; இற. 2007)
குழந்தைகள்3
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்கிறிஸ் பென்வா
தெ பெகாசசு கிட்
ஒயில்டு பெகாசசு
Billed height5 அடி 11 அங்குலம் [1]
Billed weight229 lb (104 kg)[1]
Billed fromஅட்லான்டா, ஜோர்ஜியா (மாநிலம்)
எட்மன்டன், ஆல்பர்ட்டா, கனடா
பயிற்சியாளர்புரூஸ் ஹார்ட் [2][3][4]
நியூ சப்பான் புரோ ரெஸ்லிங் [5]
முதல் போட்டிநவம்பர் 22, 1985[6]

கிறிஸ்டோபர் மைக்கேல் பென்வா (Christopher Michael Benoit (/bəˈnwɑː/ -NWAH; மே 21, 1967 - சூன் 24, 2007) ஒரு கனடிய வல்லுனர் மல்லாடல் வீரர் ஆவார். இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்,அமெரிக்காவில் ஈசிடபிள்யூ, சப்பானில் என் ஜேபிடபிள்யூ, கனடாவில் இசுடாம்பீட் மல்யுத்தம் ஆகியவை உட்பட சுமார் 22ஆண்டுகள் பல்வேறு மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். .

தி (கனடியன்) கிரிப்லர் என்ற புனைப்பெயரைக் கொண்ட இவர், தி ரேபிட் வால்வரினுடன் இணைந்து தனது வாழ்க்கை முழுவதும், உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்,ஈசிடபிள்யூ, என் ஜேபிடபிள்யூ, இசுடாம்பீட் ஆகியவற்றில் சுமார் 30 வாகையாளர் பட்டங்களைப் பெற்றுள்ளார். ஒருமுறை டபிள்யூ சி டபிள்யூ உலக மிகுகன வாகையாளர் பட்டத்தினையும், ஒருமுறை உலக மற்போர் மகிழ்கலை நிறுவன உலக மிகுகன வாகையாளர் பட்டத்தினையும் கைப்பற்றியுள்ளார்.[7] [8]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மைக்கேல் மற்றும் மார்கரெட் பென்வா ஆகியோருக்கு மகனாக கெபெக், மொண்ட்ரியால் பிறந்தார். இவர் ஆல்பர்ட்டாவின் எட்மன்டனில் வளர்ந்தார். [9] இவரது சகோதரி எட்மன்டன் அருகே வசித்து வந்தார். [10]

எட்மன்டனில் இவரது குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தின் போது,டாம் "டைனமைட் கிட்" பில்லிங்டன் [11] [12] மற்றும் பிரெட் ஹார்ட் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். [12] [13] டங்கியனில் தொழில்முறை மல்யுத்த வீரராக ஆவதற்குப் பயிற்சி பெற்றார். மேடையில், பில்லிங்டன் மற்றும் பிரெட் ஹார்ட் இருவரது பாணிகளையும் பின்பற்றினார்.[11] [14]

தொழில் வாழ்க்கை[தொகு]

இசுடாம்பீட் மல்யுத்தம் (1985–1989)[தொகு]

பென்வா தனது மல்லாடல் தொழில் வாழ்க்கையை 1985 இல் இஸ்டு ஹார்ட்டின் ஸ்டாம்பீட் மல்யுத்தத்தில் இருந்து தொடங்கினார். துவக்ககாலம் முதலே பில்லிங்டனின் பாணியுடன் இவரது அசைவுகள் ஒத்துப்போயின. டைவிங் ஹெட்பட் மற்றும் ஸ்னாப் சப்ளக்ஸ் போன்ற அவரது பல நகர்வுகளை பென்வா பயன்படுத்தினார். நவம்பர் 22, 1985இல் கால்கரியில் நடைபெற்ற போட்டியில் "தி ரிமார்க்கபிள்" எனும் புனைபெயரில் இரிக் பேட்டர்சனுடன், புட்ச் மொஃபாட் மற்றும் மைக் ஹேமருக்கு எதிராக அறிமுகப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றனர்.காமா சிங்கிற்கு எதிராக மார்ச் 18, 1988இல் இசுடாம்பீட் பிரித்தானிய பொதுநலவாய மைய-மிகுகன வாகையாளர் பட்டத்தினை முதல் முறையாக வென்றார். [15] மூன்று முறை மிகுகன வாகையாளர் பட்டத்தினையும், நான்குமுறை இணையோர் பட்டத்தினையும் கைப்பற்றியுள்ளார்.[16]

ஈசிடபிள்யூ[தொகு]

சூன் 11 ரா நிகழ்ச்சியில், பென்வா ஈசிடபிள்யூ உலக வாகையளரான பாபி லாஸ்லியிடம் தோல்வியுற்ற பிறகு சுமாக்டவுனில் இருந்து ஈசிடபிள்யூவிற்கு வரைவு செய்யப்பட்டார்.[17] சூன் 24இல் வெஞ்சன்சு நிகழ்ச்சியில் எலியா பார்க்கிற்கு எதிராக ஈசிடபிள்யூ உலக வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[18]

சொந்த வாழ்க்கை[தொகு]

பென்வா, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் சரளமாகப் பேசினார். [19] இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மார்டினாவுடன் இவருக்கு இரண்டு குழந்தைகள் (டேவிட் மற்றும் மேகன்) இருந்தனர். [20] 1997இல் திருமணமுறிவு ஏற்பட்டது. டபிள்யு சி டபிள்யூவில் இவரது முக்கிய எதிராளியான கெவின் சல்லிவனின் மனைவியுமான நான்சி சல்லிவனுடன் வாழ்ந்து வந்தார்.பிப்ரவரி 25, 2000இல் டேனியல் பிறந்தார்; நவம்பர் 23, 2000இல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நான்சிக்கு இது மூன்றாவது திருமணமாகும். 2003 ஆம் ஆண்டில், நான்சி பெனாய்ட்டிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். [21] [22]

பென்வா, சப்பானில் நடந்த ஒரு போட்டியைத் தொடர்ந்து சக மல்யுத்த வீரர் எடி குரேரோவுடன் நல்ல நண்பரானார். பென்வா, டீன் மாலென்கோவுடன் நெருங்கிய நண்பராகவும் இருந்தார், இவர்கள் மூவரும் வர்ணனையாளர்களால் "த்ரீ அமிகோஸ்" என்று அழைக்கப்பட்டனர். [23]

இறப்பு[தொகு]

சூன் 25, 2007 அன்று, உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் இறுதி நிகழ்வுகளில் முன்னறிவிப்பின்றி கலந்துகொள்ளத் தவறியதால் சோதனை செர்ய்வதற்காக ஜார்ஜியா ஃபயேட்டெவில்லில் உள்ள பெனாய்ட்டின் வீட்டிற்குள் காவல்துறையினர் சோதனை செய்வதற்காக சென்றனர்.[24] பென்வா, அவரது மனைவி மற்றும் அவர்களது மகனான 7வயது டேனிய ஆகியோர்களின் உடல்களை சுமார் 2:30 மணியளவில் கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரையும் பென்வா கொல்சி செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.[25] [26] [27]

சூன், 25இல் திட்டமிடப்பட்டிருந்த நேரடி ரா நிகழ்ச்சியினை ரத்து செய்துவிட்டு ஹார்ட் நாக்ஸ்: தி கிறிஸ் பெனாய்ட் ஸ்டோரி எனும் பெயரில் பென்வாவின் போட்டிகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பினர்.[28]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Shields, Brian; Sullivan, Kevin (2009). WWE Encyclopedia. DK. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7566-4190-0. https://archive.org/details/wweencyclopediad0000shie/page/61. 
 2. Randazzo V, Matthew (2008). Ring of Hell: The Story of Chris Benoit & the Fall of the Pro Wrestling Industry. Phoenix Books. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59777-622-6. https://archive.org/details/ringofhellstoryo0000rand/page/51. 
 3. McCoy, Heath (2007). Pain and Passion: The History of Stampede Wrestling. ECW Press. பக். 214–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55022-787-1. 
 4. Hart, Bruce (2011). Straight From the Hart. ECW Press. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55022-939-4. https://archive.org/details/straightfromhart0000hart. 
 5. "Erased! The Tragic Story of Chris Benoit". Wrestling Examiner. February 9, 2017. பார்க்கப்பட்ட நாள் May 21, 2017. Benoit began training at the legendary New Japan Dojo, and began wrestling for NJPW
 6. "Chris Benoit Results Archive". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் February 8, 2019.
 7. "Inside WWE > Title History > WCW World Championship". WWE. பார்க்கப்பட்ட நாள் July 9, 2010.
 8. "Inside WWE > Title History > World Heavyweight Championship". WWE. பார்க்கப்பட்ட நாள் July 9, 2010.
 9. Chris Benoit murder-suicide full documentary, no commercials (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-05-01
 10. Mentioned by his father in an interview with Larry King on CNN.
 11. 11.0 11.1 Lunney, Doug (January 15, 2000). "Benoit inspired by the Dynamite Kid, Crippler adopts idol's high-risk style". Archived from the original on ஜூலை 22, 2009. பார்க்கப்பட்ட நாள் May 10, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 12. 12.0 12.1 Lewis, Michael (November 14, 2007). "The Last Days of Chris Benoit". Maxim. பார்க்கப்பட்ட நாள் September 15, 2016.
 13. Bret "Hit Man" Hart: The Best There Is, the Best There Was, the Best There Ever Will Be (DVD). WWE Home Video. 2005. Event occurs at 59 & 118 minutes. Growing up as a fan, and once I began wrestling, I always looked up to him; I always emulated him [...] Bret Hart, the man that I spent so many years looking up to, idolizing; he was somewhat of a role model to me.
 14. {{cite AV media}}: Empty citation (help)
 15. "Stampede Wrestling British Commonwealth Mid-Heavyweight Title". wrestling-titles.com. பார்க்கப்பட்ட நாள் February 8, 2019.
 16. Royal Duncan & Gary Will (2006). Wrestling Title Histories (4th ). Archeus Communications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9698161-5-4. 
 17. "Raw Results". June 11, 2007. பார்க்கப்பட்ட நாள் June 29, 2007.
 18. "ECW Results". June 19, 2007. பார்க்கப்பட்ட நாள் June 29, 2007.
 19. "Benoit tragedy, one year later". SLAM! sports. Archived from the original on செப்டம்பர் 3, 2009. பார்க்கப்பட்ட நாள் July 9, 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 20. "Details of Benoit family deaths revealed". Associated Press. TSN. June 26, 2007. https://www.tsn.ca/headlines/news_story/?ID=211878. 
 21. "WWE star killed family, self". Associated Press. SportsIllustrated.cnn.com. June 26, 2007. http://sportsillustrated.cnn.com/2007/more/06/25/wrestler.dead.ap/index.html?cnn=yes. 
 22. "Released divorce papers and restraining order" (PDF). TMZ.com. Archived from the original (PDF) on June 27, 2007. பார்க்கப்பட்ட நாள் June 27, 2007.
 23. Benoit interview, "Chris Benoit: Hard Knocks" DVD, WWE Home Video.
 24. "WWE wrestler Chris Benoit and family found dead". June 25, 2007. Archived from the original on July 5, 2007. பார்க்கப்பட்ட நாள் June 25, 2007.
 25. "Sheriff: Wrestler Chris Benoit murder–suicide Case Closed – Local News | News Articles | National News | US News". February 12, 2008. http://www.foxnews.com/story/0,2933,330440,00.html. 
 26. "Wrestler Chris Benoit Double murder–suicide: Was It 'Roid Rage'? – Health News | Current Health News | Medical News". June 27, 2007. http://www.foxnews.com/story/0,2933,286834,00.html. 
 27. "Benoit's Dad, Doctors: Multiple Concussions Could Be Connected to murder–suicide – ABC News". Abcnews.go.com. September 5, 2007. பார்க்கப்பட்ட நாள் July 9, 2010.
 28. "WWE postpones show at American Bank Center". Caller-Times. June 25, 2007. Archived from the original on June 28, 2007. பார்க்கப்பட்ட நாள் June 25, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_பென்வா&oldid=3663340" இலிருந்து மீள்விக்கப்பட்டது