உலக மிகுகன வாகையாளர் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக மிகுகன வாகையாளர் போட்டி என்பது WWE க்கு சொந்தமான ஒரு தொழில்முறை மல்யுத்த போட்டி ஆகும். இது 2002 முதல் 2006 வரை மற்றும் 2010 முதல் 2013 வரை WWE இல் நடந்த சிறந்த இரண்டு வாகையாளர் போட்டிகளில் ஒன்றாகவும், 2006 முதல் 2010 வரை ஈ சி டபிள்யூவில் நடைபெற்ற மூன்று சிறந்த வாகையாளர் போட்டிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதன் பிறகு இந்தப் பட்டத்திற்கான போட்டி நடைபெறவில்லை.

2002 ஆம் ஆண்டில் ரா பிராண்டிற்காக இந்த வாகையாளர் பட்டம் அறிமுகப்படுத்தபட்டது. பின்னர் ரா மற்றும் ஸ்மாக்டவுனாகிய இரண்டும் WWE இன் கீழ் வந்ததும் இந்த வாகையாளர் பட்டம் இரண்டு நிறுவனங்களுக்குமான பொதுவான ஒன்றாக ஆனது. 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற டேபிள்ஸ் லேடர்ஸ் மற்றும் சேர்ஸ் நிகழ்ச்சியில் தான் இந்த வாகையாளர் பட்டம் இறுதியாகப் பயனபடுத்தப்பட்டது. இந்த வாகையாளர் பட்டத்தினை முதல் முறையாக பெற்றவர் டிரிபிள் எச் மற்றும் இருதியாக ரேண்டி ஆர்டன் என்பவர் இந்த வாகையாளர் பட்டத்தினை வைத்திருந்தார்.

வரலாறு[தொகு]

தோற்றம்[தொகு]

பல்வேறு உலக மிகுகன வாகையாளர் பரிணாமத்தைக் காட்டும் வரைபடம்.
முதல் பட்டத்தினைபெற்ற டிரிபிள் எச்

எரிக் பிஷபென்பவரால் இந்த உலக மிகுகன வாகையாளர் பட்டம் முதன் முதலில் 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 2 இல் நடைபெற்ற போட்டியில் டிரிபிள் எச் வாகையாளர் பட்டத்தினை வென்றார்.

சான்றுகள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]