உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ் கார்டர் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்டோபர் கார்ல் கார்டர் (Christopher Carl Carter) (பிறப்பு: அக்டோபர் 13, 1956) என்பவர் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் பெல்பிளவர், கலிபோர்னியாவில் பிறந்தார். கார்டர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றார். முன்பாக சர்ஃபிங் இதழில் பதிமூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். வால்ட் டிஸ்னி படமனை நிறுவனத்தின் தனது தொலைக்காட்சி தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். 1990 ஆம் ஆண்டில் வந்த தெ எக்சு ஃபைல்ஸ் எனும் தொலைக்காட்சி அறிவியல் புனைகதை தொடரின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்தத் தொடரானது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. மேலும் அடுத்தத் தொடருக்கும் இந்த வெற்றி வழிவகுத்தது.

பின் கார்டர், சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு டென் தேர்டீன் (பத்து பதிமூன்று) என பெயரிட்டார். பிறகு தனது தொலைக்காட்சி நிறுவனத்திற்காக மூன்று தொடர்களை உருவாக்கினார். அவை மில்லீனியம்,ஹார்ஷ் ரியல்ம், தெ லோன் கன்மேன். மில்லீனியம் (ஆயிரமாண்டுக் காலம்) என்பது சர்வசங்கார நாளினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த விதத்தில் இந்தத் தொடரானது வரவேற்பைப் பெறவில்லை. பார்வையாளர்களையும் குறைவாகவே பெற்றுத் தந்தது. ஹார்ஷ் ரியல்ம் ( இனிமையற்ற மாநிலம்) மூன்று அத்தியாயங்கள் வெளியானதோடு நிறுத்தப்பட்டது. இவருடைய தொலைக்காட்சி ஊடக பங்களிப்பிற்காக பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். இதில் எட்டு பிரைம் எம்மி விருதுகளுக்கான பரிந்துரைகளும் அடங்கும். அமேசான் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தெ ஆஃப்டர் எனும் தொலைக்காட்சித் தொடரில் இறுதியாகப் பணிபுரிந்தார்.[1]

ஆரம்பகாலவாழ்க்கை[தொகு]

கிறிஸ் கார்டர் அக்டோபர் 13, 1956 இல் பெல்பிளவர், கலிபோர்னியாவில் பிறந்தார்.[2] இவருடைய தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்தார்.[3] தனது சிறுவயதைப் பற்றிக் கூறும் போது தன்னுடைய குழந்தைப்பருவமும் மற்றவர்களைப் போல சாதராணமாகவே இருந்தது எனவும் அடிபந்தாட்டம், சறுக்கி விளையாடுதல் போன்ற விளையாட்டுகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததாகவும் கூறினார். 1979 ஆம் ஆண்டில் லாங்பீச்சில் உள்ள லாங்பீச் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்றார். தனது இருபத்தி எட்டாம் வயதில் சர்ஃபிங் இதழில் பத்கிப்பாசிரியாக ஆனார். அங்கு பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

1983 ஆம் ஆண்டில் கார்டர், டோரி பியர்சன் என்பவருடன் பொருத்தம் பார்த்தலில் (டேடிங்) ஈடுபட்டார். டேரி பியர்சன் , கார்டர் சர்ஃபிங் இதழில் வேலைபார்த்த போது அவருடன் பணிபிரிந்தவர்.[4] இவருடைய நட்பின் மூலமாக வால்ட் டிஸ்னி ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் ஒரு நிலையான பணி கிடைக்கச் செய்தது.[5] இந்த நிறுவனத்திற்காக 1986 ஆம் ஆண்டில் தெ பி. ஆர். ஏ. ட் பேட்ரோல் எனும் தொலைக்காட்சித் தொடருக்கான திரைக்கதையை எழுதினார். பின் 1988 இல் மீட் தெ முன்சீசு எனும் தொடருக்காக எழுதினார்.

விருதுகள்[தொகு]

கார்டரின் பணியைப் பாராட்டி இவரின் வாழ்க்கையில் பல்வேறு விருதுகள் கிடைத்தன.அதில் பிரைம் டைம்ஸ் எம்மி விருதிற்கான எட்டு பரிந்துரைகளும் அடங்கும்.[6] மேலும் கார்டரின் பெயரானது அமெரிக்க இயக்குநர் சங்கத்தின் விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது[7].[8] மேலும் தெ எட்கர் விருது,[9] பிரிட்டிசு அகாதமியின் தொலைக்காட்சி விருதிற்கும் இவரது பெயரானது பரிந்திரை செய்யப்பட்டது.[10]

சான்றுகள்[தொகு]

  1. Ng, Philiana (July 12, 2014). "Chris Carter Modeling Amazon's 'The After' With 99-Episode Goal". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் November 20, 2014.
  2. "Search results for Christopher Carter". California Birth Index. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.
  3. Lowry 1995, ப. 7.
  4. Buchanan, Jason. "Chris Carter - Movie and Film Biography and Filmography". Allmovie. Allrovi. Archived from the original on January 16, 2013. பார்க்கப்பட்ட நாள் July 19, 2012.
  5. Lovece 1996, ப. 3.
  6. "The X-Files | Emmys.com". Academy of Television Arts & Sciences. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012.
  7. "Awards / History / 1999 - 52nd Annual DGA Awards". Directors Guild of America. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012.
  8. "Awards / History / 1995 - 48th Annual DGA Awards". Directors Guild of America. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012.
  9. "Edgar Award Winners and Nominees Database". Mystery Writers of America. Archived from the original on October 15, 2012. பார்க்கப்பட்ட நாள் March 14, 2012. Note: Database does not allow direct linking to results. Use the drop-down menus to select "Best Episode in a TV Series" with the "Winners & Nominees" field checked for results. Results can be filtered by year, using "1995" for both year fields will narrow results to the precise year.
  10. "Awards Database - The BAFTA Site". British Academy of Film and Television Arts. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Chris Carter