உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிசுடியன் எரிச் எர்மன் வான் மேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிசுடியன் எரிச் எர்மன் வான் மேயர்
Christian Erich Hermann von Meyer
பிறப்பு(1801-09-03)செப்டம்பர் 3, 1801
பிராங்க்ஃபுர்ட்
இறப்புஏப்ரல் 2, 1869(1869-04-02) (அகவை 67)
தேசியம்செருமனி
பணிதொல்லுயிரியல்
விருதுகள்வோலாசுடன் பதக்கம் (1858)

கிறிசுடியன் எரிச் எர்மன் வான் மேயர் (Christian Erich Hermann von Meyer)(3 செப்டம்பர் 1801 – 2 ஏப்ரல் 1869), எர்மன் வான் மேயர் என்று அழைக்கப்படுபவர், ஒரு செருமனிய பழங்கால ஆராய்ச்சியாளர் ஆவார். இலண்டனின் புவியியல் சங்கத்தால் இவருக்கு 1858 வோலாசுடன் பதக்கம் வழங்கப்பட்டது.[1]

வாழ்க்கை

[தொகு]

இவர் பிராங்பேர்ட் ஆம் மெயினில் பிறந்தார்.

1832ஆம் ஆண்டில், மேயர் பேலியோலாஜிகா என்ற தலைப்பில் ஒரு படைப்பை வெளியிட்டார். மேலும் காலப்போக்கில் இவர் பல்வேறு புதைபடிவ கரிம எச்சங்கள் பற்றிய தொடர் நினைவுக் குறிப்புகளை வெளியிட்டார். இவை மெல்லுடலி, ஓடுடைய கணுக்காலி, மீன்கள் மற்றும் உயர் முதுகெலும்பிகள்,[1] டிரயாசிக் வேட்டையாடும் டெரடோசொரசு, ஆரம்பக்கால பறவையான ஆர்கியோட்ரிக்சு லித்தோகிராபிகா (1861)[2] ரெரோசார் ராம்போரைங்கசு மற்றும் புரோசாரோபோடா டைனோசர் பிளாட்டியோசாரசு.

பேலியோலாஜிகாவில், மேயர் புதை படிவ ஊர்வனவற்றை இவற்றின் உறுப்புகளின் அடிப்படையில் நான்கு பெரிய குழுக்களாக முன்மொழிந்தார்:

  • கால்விரல்கள் கொண்ட சௌரியர்கள் வாழும் உயிரினங்கள் (எ.கா. டெலியோசொரசு, புரோட்டோரோசொரசு, இசுட்ரெப்டோசுபாண்டிலசு)
  • பெரும் நிலப் பாலூட்டிகளைப் போன்ற மூட்டுகளைக் கொண்ட சௌரியன்கள் (இகுவானோடன், மெகலோசரசு)
  • நீச்சலுக்கான மூட்டுகளைக் கொண்ட சௌரியர்கள் (எ.கா. ப்ளேசியோசொரசு, மொசாசரசு)
  • பறக்கும் மூட்டுகள் கொண்ட சௌரியர்கள் (டெரோடாக்டைலசு)

இவரது இரண்டாவது குழுவை இவர் தாமதமாக 1845-ல் பாக்கிபோடெசு என்று அழைத்தார். பின்னர் கிரேக்க "pachy-/παχυ-" ("தடித்த") மற்றும் "pous/πους" ("பாதம்") ஆகியவற்றிலிருந்து பாக்கிபோடோ என மாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இரிச்சர்டு ஓவன் என்பவரால் உருவாக்கப்பட்ட டைனோசௌரியாவுடன் இந்தக் குழுவின் தொடர்பை இவர் முன்வைத்தார்.

கார்பனிபெரசுக் காலம் ஆம்பிபியா, பேர்மியன் ஊர்வன, டிராசிக் காலம் நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன மற்றும் லித்தோகிராபிக் இசுலேட்டுகளின் ஊர்வன ஆகியவை இவரது விரிவான ஆராய்ச்சிகளாகும். இவரது இந்த ஆய்வுகள் வரலாற்றுக்கு முந்தைய உலகின் விலங்கினங்களைப் பற்றி எனும் Zur Fauna der Vorwelt-1845-1860) நூலில் கல்லில் வரையப்பட்ட படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.[1]

இவர் 1851-ல் தொடங்கிய பேலியோன்டோகிராபிகாவின் வெளியீட்டில் டபிள்யூ டன்கர் மற்றும் கார்ல் ஆல்ஃபிரட் வான் ஜிட்டல் ஆகியோருடன் தொடர்புடையவர். 1858-ல் இலண்டனின் புவியியல் சங்கத்தால் இவருக்கு வொல்லசுடன் பதக்கம் வழங்கப்பட்டது.[1] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் அமெரிக்கத் தத்துவ சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேயர் மத்திய ஐரோப்பாவில் ப்ரோசோரோபாட் டைனோசர் பிளாட்டோசொரசு ஏங்கல்கார்டியை விவரித்ததன் அடிப்படியிலும் பெயரிடுவதற்கும் மிகவும் பிரபலமானவர்.

ஆதாரங்கள்

[தொகு]
  • Meyer, H. von (1837): [Mitteilung an Prof. Bronn] (Plateosaurus engelhardti). Neues Jahrbuch für Geologie und Paläontologie 316 [Article in German].
  • Creisler, B (1995): "Pondering the Pachypoda: Von Meyer and the Dinosaur" The Dinosaur Report Winter 1995. 10–11.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Chisholm 1911.
  2. Meyer, H. von (1861). "Archaeopterix lithographica (Vogel-Feder) und Pterodactylus von Solenhofen" (in German). Neues Jahrbuch für Mineralogie, Geognosie, Geologie und Petrefaktenkunde: 678–679. https://books.google.com/books?id=6RAFAAAAQAAJ&pg=PA678.  ; see also plate V. On p. 679, Meyer named Archaeopteryx: "Zur Bezeichnung des Thieres halte ich die Benennung Archaeopteryx lithographica geeignet." (For the designation of this animal, I deem appropriate the appelation Archaeopteryx lithographica.)
  3. "APS Member History".

பண்புக்கூறு: