இரிச்சர்டு ஓவன்
Jump to navigation
Jump to search
இரிச்சர்டு ஓவன் | |
---|---|
![]() முதலை மண்டையோட்டுடன் ஓவன்,1856 | |
பிறப்பு | சூலை 20, 1804 லேன்காசுடர், இங்கிலாந்து |
இறப்பு | 18 திசம்பர் 1892 ரிச்மண்ட் பூங்கா, லண்டன், இங்கிலாந்து | (அகவை 88)
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | ஒப்பீட்டு உடற்கூற்றியல் தொல்லுயிரியல் |
கல்வி கற்ற இடங்கள் | எடின்பர்க் பல்கலைக்கழகம் புனித பார்தோலாமியின் மருத்துவமனை |
அறியப்படுவது | இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன் |
சர்.இரிச்சர்டு ஓவன் FRS KCB (ஆங்கிலம்:Sir Richard Owen) (20 சூலை 1804 – 18 திசம்பர் 1892) என்ற ஆங்கிலேய அறிஞர் சிறந்த மருத்துவர், உயிரியலாளர், ஒப்பீட்டு உடற்கூற்றியலாளர், தொல்லுயிரியலாளர் ஆவார். 'டைனோசாரியா' (Dinosauria) என்ற சொல்லை உருவாக்கியவர். அச்சொல்லுக்கு 'கொடூர பல்லி அல்லது அதிபய ஊர்வன' என்று பொருள் கொள்ளலாம். சார்லஸ் டார்வின் நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர். அவர் டார்வின் கூறியதைவிட, பரிணாமம் மிகவும் சிக்கல் நிறைந்தது என அறுதியிட்டார்.