கிரௌன் கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரௌன் கண்ணாடி மற்றும் தீக்கல் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகள்.

கிரௌன் கண்ணாடி (Crown glass) என்பது ஒரு ஒளியியல் கண்ணாடி. இது வில்லைகள் மற்றும் ஒளியியல் கருவிகள் செய்யப் பயன்படுகிறது. இதன் ஒளிவிலகல் எண் (≈1.52) மற்றும் நிறப்பிரிகைத் திறன் குறைவாகவே உள்ளது. (இதன் அபி எண் 60 என்ற அளவில் உள்ளது).

கிரௌன் கண்ணாடி என்பது சுண்ணாம்பு-காரப்பொருள் சிலிகேட்டால் ஆனது. இதில் 10% பொட்டாசியம் ஆக்சைடும் உள்ளது. குறிப்பிட்ட வேதிப்பொருளால் ஆன கண்ணாடி, கிரௌன் கண்ணாடி என அழைக்கப்பட்டாலும், அதைப் போன்றே பண்புகள் கொண்ட கண்ணாடிகளும் கிரௌன் கண்ணாடி என அழைக்கப்படுகிறது. பொதுவாக அவற்றின் அபி எண் 50 முதல் 85 வரை இருக்கும். எடுத்துக்காட்டாக, போரோசிலிக்கேட் கண்ணாடி இவ்வகையைச் சேர்ந்தது.[1]

போரோசிலிக்கேட்டுகள் துல்லியத்தன்மை வாய்ந்த வில்லைகளை உருவாக்கப் பயன்படுகிறது. போரோசிலிக்கேட்டுகள் 10% அளவில் போரான் ஆக்சைடைக் கொண்டுள்ளது. இவை சிறந்த ஒளியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை வேதியியல் காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிப்படைவதில்லை. பாஸ்பரஸ் பென்டாக்சைடு, துத்தநாக ஆக்சைடு, பேரியம் ஆக்சைடு மற்றும் லாந்தனம் ஆக்சைடு ஆகிய வேதிப் பொருளாலும் கிரௌன் கண்ணாடி உருவாக்கப்படுகிறது.

கிரௌன் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட குழி வில்லையும், தீக்கல் கண்ணாடியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குவி வில்லையும் இணைத்து நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லையாகச் உருவாக்கப்படுகிறது. ஒரே குவியத் தூரம் கொண்ட தனியாகப் பயன்படுத்தப்படும் வில்லைகளைவிட, இவை நிறப்பிரிகையை ஒன்றுக்கொன்று சரிசெய்கின்றன மற்றும் அதன் நிறப்பிறழ்ச்சி (chromatic aberration) குறைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The crown/flint distinction is so important to optical glass technology that many glass names, notably Schott glasses, incorporate it. A K in a Schott name indicates a crown glass (Krone in German — Schott is a German company). The B in BK7 indicates that this is a borosilicate glass composition.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரௌன்_கண்ணாடி&oldid=3454080" இலிருந்து மீள்விக்கப்பட்டது