உள்ளடக்கத்துக்குச் செல்

கிருட்டிண மோகன் பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிண மோகன் பானர்ஜி
கிருஷ்ணா மோகன் பானர்ஜியின் வரைபடம் (1886)
பிறப்பு(1813-05-24)24 மே 1813
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு(1885-05-11)11 மே 1885
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்பிரிட்டிசு இந்தியன்
பணிகிறிஸ்தவ சுவிசேசகர், பேராசிரியர், எழுத்தாளர்

கிருட்டிண மோகன் பானர்ஜி (Krishna Mohan Banerjee) [1] (1813 மே 24   - 1885 மே 11) இவர் கிறிஸ்தவ சிந்தனைகளின் தூண்டுதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்து தத்துவம், மதம் மற்றும் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய முயன்ற 19 ஆம் நூற்றாண்டு இந்திய சிந்தனையாளர் ஆவார். இவரே ஒரு கிறிஸ்தவராகவும் மாறினார். இவர், வங்காள கிறிஸ்தவச் சங்கத்தின் முதல் தலைவராகவும் இருந்தார். இது இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டது. இவர் ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோவின் (1808–1831) இளம் வங்காளியாகவும், கல்வியாளராகவும், மொழியியலாளராகவும் மற்றும் கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களின் முக்கிய உறுப்பினராவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]
கோல்ஸ்வொர்தி கிராண்ட் என்பவர் வரைந்த கிருட்டிண மோகன் பானர்ஜியின் உருவப்படம்

ஜிபான் கிருஷ்ண பானர்ஜி மற்றும் சிறிமதி தேவி ஆகியோருக்கு மகனாக கிருட்டிண மோகன் 1813 மே 24 அன்று கொல்கத்தாவிலுள்ள சியாம்பூரின் பிறந்தார். ஜோராசங்கோவின் சாந்திராம் சின்காவின் அவையில் பண்டிதராக இருந்த இவரது தாய்வழி தாத்தாவான இராமஜெய வித்யாபூசனின் வீட்டில் வளர்ந்தார்.

1819 ஆம் ஆண்டில், கிருட்டிண மோகன், கொலூதோலாவில் டேவிட் ஹரே என்பவரால் நிறுவப்பட்ட பள்ளியில் (பின்னர் ஹரே பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டது) சேர்ந்தார். இவரது திறமைகளால் ஈர்க்கப்பட்ட டேவிட் ஹரே 1822 இல் படல்தங்காவில் ஹரே பள்ளி என்று புகழ் பெற்ற தனது பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பானர்ஜி புதிதாக நிறுவப்பட்ட இந்துக் கல்லூரியில் உதவித்தொகையுடன் சேர்ந்தார்.

1831 ஆம் ஆண்டில், மத-சீர்திருத்தவாதியும் மற்றும் எழுத்தாளருமான பானர்ஜி தி இன்க்வைரர் என்ற இதழை வெளியிடத் தொடங்கினார். அதே ஆண்டில் , கொல்கத்தாவில் உள்ள தற்போதைய இந்து சங்கத்தின் தற்போதைய நிலை பற்றிய நாடகம் தயாரிக்கப்பட்டது. இது நடைமுறையில் உள்ள சில சமூக நடைமுறைகளை ஒரே மாதிரியாக விமர்சித்தது. கல்லூரியில் படித்தபோது, 1830 இல் இந்தியாவுக்கு வந்திருந்த இசுகாட்டிசு கிறிஸ்தவ தொண்டு நிறுவனர் அலெக்சாண்டர் டப் அவர்களின் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். இவரது தந்தை 1828 இல் காலராவால் இறந்தார்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம்

[தொகு]

1829 இல் தனது படிப்பை முடித்ததும், பானர்ஜி படல்தங்கா பள்ளியில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். 1832 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் டப்பின் செல்வாக்கின் கீழ், இவர் கிறிஸ்தவத்திற்கு மாறினார். இவர் மதம் மாற்றப்பட்டதன் விளைவாக, டேவிட் ஹரேவின் பள்ளியில் வேலையை இழந்தார். மேலும் இவரது மனைவி விந்தியவாசினி பானர்ஜி தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் இவர் தேவாலயச் சபைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார். [2]

தொண்டு நிறுவனங்கள் கொல்கத்தாவில் அதன் தொண்டு நடவடிக்கைகளைத் நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, பானர்ஜி கிறிஸ்து தேவாலயத்தின் முதல் வங்காளப் பாதிரியார் ஆனார். அங்கு இவர் பெங்காலி மொழியில் பிரசங்கம் செய்தார். [2]

இவர் தனது மனைவி, தனது சகோதரர் காளி மோகன் மற்றும் பிரசன்னா குமார் தாகூரின் மகன் கணேந்திர ஞானேந்திரமோக மோகன் பிரசன்ன குமார் ஆகியோரை கிறிஸ்தவ மததிற்கு மாற்றினார்]] . இதனையடுத்து, கணேந்திர மோகன் இவரது மகள் கமலமணியை மணந்தார். மேலும் ஒரு வழக்கறிஞராக தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆனார். மைக்கேல் மதுசூதன் தத்தின் மதமாற்றத்திலும் பானர்ஜி முக்கிய பங்கு வகித்தார்.

பிந்தைய வாழ்க்கை

[தொகு]

1852 ஆம் ஆண்டில், கிருட்டிண மோகன் கொல்கத்தாவின் தேவாலயக் கல்லூரியில் கிழக்கத்தியப் பாடப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1836 மற்றும் 1839க்கும் இடையில் அதே கல்லூரியின் மாணவராகச் சேர்ந்து கிறிஸ்தவத்தின் அம்சங்களைப் படித்தார்.

1864 ஆம் ஆண்டில் ஈஸ்வர சந்திர வித்யாசாகருடன் சேர்ந்து ஆசியச் சங்கத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1876 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

இறப்பு

[தொகு]

கிருட்டிண மோகன் பானர்ஜி 1885 மே 11 அன்று கொல்கத்தாவில் இறந்தார். மேலும் இவரது மனைவியின் கல்லறையுடன் சிபூரில் அடக்கம் செய்யப்பட்டார். கல்லறை தற்போது இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்குள் அமைந்துள்ளது [3] .

படைப்புகள்

[தொகு]

இவர் 13 தொகுதி அடங்கிய   - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் பெங்காலி தழுவலான வித்யாகல்பத்தருமா அல்லது என்சைக்ளோபீடியா பெங்காலென்சிஸ் (1846–51) என்பதை ஆங்கிலத்தில் வெளியிட்டார். [4] இவர் 1831 இல் "பெர்சிகியூட்டட்" (துன்புறுத்தப்பட்டவர்) என்ற இந்திய ஆங்கில நாடகத்தை எழுதினார்.

இவரது பிற படைப்புகளில் தி ஆரியன் விட்னஸ் (1875), [5] டயலாக்ஸ் ஆன் தி ஹிந்து பிலாசபி (1861) [6], மற்றும் தி ரிலேசன் பிட்வீன் கிரிஸ்டியானிட்டி அன்ட் ஹிந்துஸ்தான் (1881) ஆகியவை அடங்கும்.

நினைவு

[தொகு]
கிருட்டிண மோகன் இரயில் நிலையம், சீல்தா தெற்குப் பிரிவு

சீல்தா தெற்குப் பிரிவில் உள்ள கிருட்டிண மோகன் இரயில் நிலையம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. [7]

குறிப்புகள்

[தொகு]
  1. His surname is also transliterated as Banerjea or as Bandyopadhyay.
  2. 2.0 2.1 Murshid, Ghulam (2012). "Banerji, Rev. Krishna Mohan". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  3. P, Jhimli Mukherjee; Jan 7, ey | TNN | Updated; 2019; Ist, 9:15. "IIEST on revamp mode for bicentenary year | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-22. {{cite web}}: |last3= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  4. Datta, Amaresh (1988). Encyclopaedia of Indian literature. Vol. 2. Delhi: South Asia Books. pp. 1162–1163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-649-4.
  5. "The Arian Witness, Or, The Testimony of Arian Scriptures: In Corroboration ..." (in English). Thacker, Spink. 1875. பார்க்கப்பட்ட நாள் 12 July 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. iarchive:dialoguesonhindu00banerich
  7. "Trains arriving at and passing through Krishnamohan (halt)". Trainroutes. பார்க்கப்பட்ட நாள் February 15, 2017.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிண_மோகன்_பானர்ஜி&oldid=2991014" இலிருந்து மீள்விக்கப்பட்டது