ஹென்றி விவியன் டெரோசியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ அல்லது ஹென்றி விவியன் டெரோசியோ (Henry Louis Vivian Derozio, 18 ஏப்ரல் 1809 – 26 திசம்பர் 1831) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இந்தியக் கவிஞர், கல்கத்தா இந்துக் கல்லூரியின்[1] உதவி தலைமை ஆசிரியர் மற்றும் புரட்சிகர சிந்தனையாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய கல்விமுறையை இந்தியாவில் பரப்பியவர்களுள் குறிப்படத்தக்கவரும் முன்னோடியும் ஆவார். இவரது மாணவர்கள்கள் டெரோசியன்கள் அல்லது இளம் வங்காளிகள் என்று அழைக்கப்பட்டனர். அவர் தமது மாணவர்களுடன் மேற்கொண்ட இயக்கத்தில் பெண்கல்வி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். சிலை வழிபாடு, சாதிமுறை மற்றும் மூடபழக்கவழக்கங்களைச் சாடினார். காலரா நோய் பாதிப்பினால் 1831 ஆம் ஆண்டு காலமானார்.

15 திசம்பர் 2009 இல் அவரின் நினைவாக ஓர் அஞ்சல்தலையை இந்திய அரசு வெளியிட்டது.[2]

சான்றுகள்[தொகு]