உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிந்திர மல்லிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிந்திர மல்லிக்கு
Girindra Mallik
எல்லைப் பகுதிகள், சிறைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்களுக்கான மாநில அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு),
அசாம் அரசு
பதவியில்
26 சனவரி 2015 – 24 மே 2016
முன்னையவர்தருண் கோகோய் (எல்லைப் பகுதிகள்)
அகோன் போரா (சிறைகள்)
கோர்சிங் எங்கடி (கனிமம் மற்றும் சுரங்கம்)
பின்னவர்சர்பானந்த சோனாவால் எல்லைப்புறப் பகுதிகள்,சிறைகள்)
பிரமிளா ராணி பிரம்மா (கனிமம் மற்றும் சுரங்கம்)
அசாம் சட்டப் பேரவை
தொலாய் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1996–2001
முன்னையவர்பரிமளா சுக்லபைத்யா
பின்னவர்பரிமளா சுக்லபைத்யா
பதவியில்
13 மே 2011 – 19 மே 2016
முன்னையவர்பரிமளா சுக்லபைத்யா
பின்னவர்பரிமளா சுக்லபைத்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 May 1939 (1939-05) (வயது 86)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நில்லிமா மல்லிக்கு
பெற்றோர்சுக்லால் மல்லிக்கு (தந்தை)
சௌதாமினி மல்லிக்கு (தாய்)

கிரிந்திர மல்லிக்கு (Girindra Mallik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1939 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். அசாம் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான கிரிந்திர மல்லிக்க்கு இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் தோலாய் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் பரிமளா சுக்லபைத்யாவை தோற்கடித்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் பரிமளா சுக்லைபைத்யாவால் தோற்கடிக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் பரிமளா சுக்லபைத்யாவை தோற்கடித்து இரண்டாவது முறையாக அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் எல்லைப் பகுதிகள், சிறைகள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்களுக்கான மாநில அமைச்சராக (சுயாதீனப் பொறுப்பு) முதல்வர் தருண் கோகோயின் அமைச்சர்கள் குழுவில் சேர்க்கப்பட்டார் [1] . 2016 ஆம் ஆண்டில் தனது தொகுதியிலிருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் பரிமளா சுக்லபைத்யாவினால் தோற்கடிக்கப்பட்டார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tarun Gogoi reshuffles Assam ministry, 11 cabinet ministers join" (in ஆங்கிலம்). 2015-01-23. Retrieved 2022-03-12.
  2. "Dholai Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". Retrieved 2022-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிந்திர_மல்லிக்கு&oldid=3993347" இலிருந்து மீள்விக்கப்பட்டது