உள்ளடக்கத்துக்குச் செல்

கிராது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராது
வகைபிரஜாபதி
சகோதரன்/சகோதரிபுண்ணியம் மற்றும் சத்தியவதி
குழந்தைகள்60,000 வாலகில்யர்கள்

கிராது (Kratu), பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய மானசபுத்திரர்களில் ஒருவர்.[1]மேலும் சப்தரிஷிகளிலும் ஒருவராக கருதப்படுகிறார். இவரது 60,000 குழந்தைகளை வாலகில்யர்கள் என்பர்.

தொன்ம வரலாறு

[தொகு]
கிரது ரிஷியின் தொடர்புடைய கருடனின் சிற்பம்

சுவாயம்பு மனுவின் மன்வந்தர காலத்தின் போது, பிரம்மாவின் மானசபுத்திரர்களில் ஒருவர். மேலும் பிரஜாபதியான கிராது ரிஷி, பிரஜாபதியான கதர்மா எனும் ரிஷியின் மகளான கிரியாவை மணந்தவர். இவருக்குப் பிறந்த 60,000 குழந்தைகளை வாலகில்யர்கள் என அழைப்பர். வாலகில்யர்களின் பெயர் ரிக் வேதத்தின் 8வது மண்டலத்தில் குறிப்பிட்டுள்ளது. கிராது ரிஷியின் உடன்பிறந்த சகோதரிகள் புண்ணியம் மற்றும் சத்தியவதி ஆவார். மேலும் கிராது ரிஷி சந்ததி எனும் பெண்ணை மணந்ததாக புராணங்கள் கூறுகிறது.

சதியுடன் விவாதித்து கொண்டிருக்கும் சிவனை இகழும் தட்சன்

தன் மருமகனான சிவனை விட்டு விட்டு, தக்கன் யாகம் செய்த போது, அந்த வேள்வித் தீயில் பார்வதி தீக்குளித்து மடிந்தாள்.[2][3] இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தனது பூத கணங்களை அனுப்பி, தட்சனின் வேள்வியை அழித்து, அதில் கலந்து கொண்ட தேவர்கள் மற்றும் ரிஷிகளையும் அழிக்க ஆணையிட்டார். தட்சனின் வேள்வியில் கலந்து கொண்ட கிராது ரிஷியும் மடிந்தார் வைவஸ்வதமனுவின் காலத்தில் கிராது ரிஷி திருமணம் செய்து கொள்ளாமல், அகஸ்திய முனிவரின் மகனான இத்மாவாகானை தத்தெடுத்து வளர்த்தார்.

இதனையும் காண்க

[தொகு]

References

[தொகு]
  1. www.wisdomlib.org (2015-12-21). "Kratu: 23 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-10-31.
  2. Menon, Ramesh (2006). Siva : the Siva Purana retold. Ramesh Menon. New Delhi: Rekha Printers. ISBN 978-81-291-1495-2. கணினி நூலகம் 870703420.
  3. Vanita, Ruth (2000), "Shiva Purana: The Birth of Kartikeya (Sanskrit)", Same-Sex Love in India, New York: Palgrave Macmillan US, pp. 77–80, doi:10.1007/978-1-137-05480-7_7, ISBN 978-0-312-29324-6, retrieved 2021-11-30
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராது&oldid=4125064" இலிருந்து மீள்விக்கப்பட்டது