கிரஃகாம் கிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரஃகாம் கிரீன் (கிரஹாம் க்ரீன், Graham Greene; அக்டோபர் 2, 1904ஏப்ரல் 3, 1991) ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர், நாடகாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். நன்மை, தீமை என்று தெளிவாக வரையறுக்காமல், தெளிவற்ற அறநிலையைக் களமாகக் கொண்டு கிரீன் எழுதிய புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவரது பல புதினங்கள் உலகின் தலை சிறந்த ஆங்கில புதினங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன. கிரீனின் படைப்புகளில் ரோமன் கத்தோலிக்கம், அமெரிக்க எதிர்ப்பு, இடதுசாரி சிந்தனைகள் மிகுந்து காணப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

  • பிரைட்டன் ராக்
  • தி பவர் அண்ட் தி குளோரி
  • தி ஹார்ட் ஆஃப் தி மேட்டர்
  • தி எண்ட் அஃப் தி அஃபையர்
  • தி கான்ஃபிடன்சியல் ஏஜண்ட்
  • தி தர்ட் மேன்
  • அவர் மேன் இன் ஹவானா
  • தி ஹியூமன் ஃபாக்டர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஃகாம்_கிரீன்&oldid=1358474" இருந்து மீள்விக்கப்பட்டது