கியோர்டானோ புரூணோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியோர்டானோ புரூணோ
பிறப்பு1548
இத்தாலி
இறப்புபெப்ரவரி 17, 1600 (அகவை 51–52)
உரோமை நகரம், இத்தாலி
காலம்மறுமலர்ச்சி மெய்யியல்
பகுதிஐரோப்பா
முக்கிய ஆர்வங்கள்
மெய்யியல், அண்டவியல் மற்றும் கணிதம்
கியோர்டானோ புரூணோ

கியோர்டானோ புரூணோ (1548 – பெப்ரவரி 17, 1600) ஒரு இத்தாலிய மெய்யியலாளர். கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என்னும் கருத்தையும், அண்டத்தின் முடிவில்லாமல் பரந்தது என்னும் கருத்தையும் கொண்டிருந்த தொடக்க காலத்தவர்களில் இவரும் ஒருவர். இவரது அண்டவியல் ஆக்கங்களுக்குப் புறம்பாக இவர் நினைவாற்றல் கலை குறித்தும் பல ஆக்கங்களை எழுதியுள்ளார். தற்கால அறிவியல் எண்ணக்கருக்கள் தொடர்பிலான தொடக்ககால தியாகிகளில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். ரோமரின் வழக்கு மன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனைப்படி எரித்துக் கொல்லப்பட்டது இதற்கு ஒரு காரணமாகும்.

பிரான்செஸ் யேட்ஸ் தொடக்கம் எழுதப்பட்ட, புரூணோ குறித்த மதிப்பீடுகள், இவரை அராபியர்களின் சோதிட மாயாஜாலம், நியோபிளாட்டோனியம் (Neoplatonism), மறுமலர்ச்சிக் கால ஹேர்மசியம் (Hermeticism) போன்றவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தவராகக் காட்டுகின்றன. வேறுசில அண்மைக்கால ஆய்வுகள் இவரது கணிதம் தொடர்பான பண்புசார் அணுகுமுறைகள் குறித்துப் பேசுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோர்டானோ_புரூணோ&oldid=2228350" இலிருந்து மீள்விக்கப்பட்டது