கியெர்மோ லாசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியெர்மோ லாசோ
Guillermo Lasso
2017 இல் லாசோ
எக்குவடோர் அரசுத்தலைவர்
பதவியேற்பு
24 மே 2021
துணை குடியரசுத் தலைவர் அல்பிரெடோ வேகா
முன்னவர் லெனின் மொரேனோ
பொருளாதார அமைச்சர்
பதவியில்
17 ஆகத்து 1999 – 24 செப்டம்பர் 1999
குடியரசுத் தலைவர் சமீல் மகுவாது
கயாசு ஆளுநர்
பதவியில்
10 ஆகத்து 1998 – 17 ஆகத்து 1999
முன்னவர் கைடோ பாரா
பின்வந்தவர் பெஞ்சமின் வலன்சுவேலா
தனிநபர் தகவல்
பிறப்பு கியெர்மோ அல்பெர்ட்டோ சந்தியாகோ லாசோ மென்டோசா
16 நவம்பர் 1955 (1955-11-16) (அகவை 67)
உவயாகில், எக்குவடோர்
அரசியல் கட்சி வாய்ப்புகளை உருவாக்குதல்
வாழ்க்கை துணைவர்(கள்) மரியா டி லோர்டெசு (தி. 1981)
பிள்ளைகள் 5
கல்வி எக்குவதோர் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (முடிக்கவில்லை)
இணையம் guillermolasso.ec

கியெர்மோ லாசோ (Guillermo Lasso; எசுப்பானிய ஒலிப்பு: [ɡiˈʝeɾmo ˈlaso]; பிறப்பு: 16 நவம்பர் 1955) எக்குவடோர் தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் எக்குவடோர் அரசுத்தலைவரா 2021 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 2021 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு,[3] அந்திரேசு அரூசு என்பவரைத் தோற்கடித்து,[4][5] எக்குவதோரின் 47-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] முன்னதாக இவர் 2013, 2017 தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தார். 2013 தேர்தலில், ராஃபாயெல் கொறேயாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வந்தார்.[7]

லாசோ 199ப9 இல் சமீல் மகுவாதின் அமைச்சரவையில் பொருளாதாரத்துக்கான அமச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். முன்னதாக 1998 முதல் 1999 வரை கயாசு மாகாண ஆளுநராகப் பதவியில் இருந்தார். அரசியல் பணியைத் தவிர்த்து, லாசோ ஒரு வங்கியாளராகவும், கயாக்கில் வங்கியின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.[8]

தாராளமயவாதியான லாசோவின்[9] பொது நிகழ்ச்சி நிரலில், அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பிரித்தல், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் போன்ற தொன்மைத் தாராளவாதக் கோட்பாடுகளும் உள்ளன.[10] அத்துடன் வரிகளைக் குறைப்பதற்கு ஆதரவாக அவர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இவர் கட்டற்ற சந்தைமுறைக்கும் ஆதரவளித்து வருகிறார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "LATEST: Ecuador's pro-market candidate Guillermo Lasso wins the presidential runoff". Bloomberg Quicktake. 11 April 2021. https://twitter.com/Quicktake/status/1381432623860432897. பார்த்த நாள்: 11 April 2021. 
  2. "Ecuador goes with conservative banker in presidential vote". அசோசியேட்டட் பிரெசு. 11 April 2021. https://apnews.com/article/public-health-rafael-correa-health-south-america-coronavirus-pandemic-fb947b78c70ac225c0982a76d44063f3. 
  3. "CNE acepta candidatura del binomio Lasso-Borrero, impugnada por el correísmo". 22 January 2021. https://www.larepublica.ec/blog/2020/10/01/cne-califica-candidatura-de-lasso-borrero/. 
  4. Leon Cabrera, Jose Maria (11 April 2021). "Conservative Ex-Banker Headed to Victory in Presidential Election in Ecuador". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2021/04/11/world/americas/ecuador-election-indigenous.html. 
  5. "Guillermo Lasso: Conservative ex-banker elected Ecuador president". BBC World News. 12 April 2021. https://www.bbc.com/news/world-latin-america-56713570. 
  6. "Ecuador election: former banker Lasso is surprise winner". தி கார்டியன். 11 April 2021. https://www.theguardian.com/world/2021/apr/12/ecuador-election-result-guillermo-lasso-andres-arauz. 
  7. Neuman, William (February 17, 2013). "President Correa Handily Wins Re-election in Ecuador". The New York Times. https://www.nytimes.com/2013/02/18/world/americas/rafael-correa-wins-re-election-in-ecuador.html?_r=0. 
  8. "Guillermo Lasso renunció a la presidencia ejecutiva del Banco de Guayaquil". 7 May 2012. https://www.eluniverso.com/2012/05/07/1/1355/guillermo-lasso-renuncio-presidencia-ejecutiva-banco-guayaquil.html. 
  9. "Guillermo Lasso: Mi vida me hizo liberal" (in es). 9 May 2012. https://www.eluniverso.com/2012/05/10/1/1355/guillermo-lasso-vida-me-hizo-liberal.html. 
  10. "Lasso dice que no persigue el poder total". https://www.elcomercio.com/actualidad/politica/lasso-dice-que-no-persigue.html. 
  11. "Ecuador’s Guillermo Lasso Wins Presidential Election". The Wall Street Journal. 11 April 2021. https://www.wsj.com/articles/ecuadors-guillermo-lasso-wins-presidential-election-11618195085. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியெர்மோ_லாசோ&oldid=3134189" இருந்து மீள்விக்கப்பட்டது