உள்ளடக்கத்துக்குச் செல்

கிடாரி சிரவன் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிடாரி சிரவன் குமார்
ஆந்திரப் பிரதேச அரசசில் பழங்குடியினர் நலன் மற்றும் அதிகாரமளித்தல், ஆரம்ப சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
பதவியில்
11 நவம்பர் 2018 – 10 மே 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவிசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பெற்றோர்கிடாரி சர்வேசுவர ராவ் (தந்தை)
வேலைஅரசியல்வாதி

கிடாரி சிரவன் குமார் (Kidari Sravan Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். மாவோயிஸ்டுகளால் அரக்கு பள்ளத்தாக்கில் இவரது தந்தை கிடாரி சர்வேசுவர ராவ் கொல்லப்பட்டதை அடுத்து, இவர் மாநில பழங்குடியினர் நலம், ஆரம்ப சுகாதாரம், குடும்ப நலம், வைத்ய விதான பரிசத், மருந்து கட்டுப்பாடு மற்றும் ஆயுஷ் அமைச்சராக, தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்தால் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் பதவியேற்றார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

கிடாரி சிரவன் மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் கிடாரி சர்வேசுவர ராவின் மகன் ஆவார்.[1] கிடாரி குடும்பத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியின் நன்றியின் அடையாளமாக சிரவனுக்கு அமைச்சரவை பதவி கிடைத்தது. இவர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆகாமல் 2018 நவம்பர் 11 ஆம் தேதி ஆந்திர அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். ஆறு மாத காலத்திற்குள் தேர்தலில் நின்று வெற்றி பெற தவறிவிட்டார். எனவே 9 மே 2019 அன்று அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.[2][3] 2019 சட்டமன்றத் தேர்தலில் அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாரி_சிரவன்_குமார்&oldid=3820658" இலிருந்து மீள்விக்கப்பட்டது